ஓட்ஸ் காய்கறிக் கஞ்சி

ஓட்ஸ் காய்கறிக் கஞ்சி
Author:Thenammai Lakshmanan / தேனம்மைலெக்ஷ்மணன்

 
தேவையானவை :-


ஓட்ஸ் – 1 பாக்கெட் ( 100 கி)
வெங்காயம் – சிறிது 1 – பொடியாக அரியவும்
தக்காளி – ½ பாகம் பொடியாக அரியவும்.
காரட் , பீன்ஸ் – கால் கப் பொடியாக அரியவும்.
பச்சைப் பட்டாணி – 2 டீஸ்பூன்
சீரகம் , மிளகு – பொடித்தது 1 டீஸ்பூன்
அல்லது இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் +
கரம் மசாலா தூள் – ¼ டீஸ்பூன்
ஆம்சூர்பொடி – ¼ சிட்டிகை
தண்ணீர் – 3 கப்
உப்பு – ½ டீஸ்பூன்

 
செய்முறை:-


 

தண்ணீரைக் கொதிக்க வைக்கவும்.
அதில் ஓட்ஸை வேகப் போடவும்.
மிளகு சீரகம் சேர்ப்பதானால் காரட் பீன்ஸ் பட்டாணி தக்காளி வெங்காயத்தை அதனுடன் வேகப்போடவும்.
வெந்ததும் கண்ணாடி போல ஒட்டாமல் வரும்போது உப்பும் மிளகு சீரகப் பொடியும் சேர்த்து இறக்கவும்.

இஞ்சி பூண்டு பேஸ்ட் போடுவதானால் ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி வெங்காயம், காய்கறிக்கலவையை வதக்கி கரம் மசாலா பொடி, ஆம்சூர் பொடி உப்பு சேர்த்து வதக்கி கொதிக்கும் ஓட்ஸில் சேர்க்கவும்.
கண்ணாடி போல ஒட்டாமல் வெந்ததும் இறக்கி அப்பளம், சாஸுடன் பரிமாறவும்.

image source:https://lh5.googleusercontent.com/-_6otWh3RWIA/Tq466DMWHFI/AAAAAAAABR4/2shdC_LbiQ4/s576/oats%252520kunji-1.JPG

189 total views, 1 views today

Share Button