கத்திரிக்காய் கோஸ்மல்லி

கத்திரிக்காய் கோஸ்மல்லி
Author:Thenammai Lakshmanan / தேனம்மைலெக்ஷ்மணன்

 
தேவையானவை :-


கத்திரிக்காய் – 250 கி
உருளைக்கிழங்கு – 1 வேகவைத்தது ( விரும்பினால்)
பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரியவும்
தக்காளி – 1 பொடியாக அரியவும்.
பச்சை மிளகாய் – 6 இரண்டாக வகிரவும்.
கருவேப்பிலை – 1 இணுக்கு
புளி – 1/2 எலுமிச்சை அளவு
உப்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை

 
செய்முறை:-


 

கத்திரிக்காய்களைக் கழுவி நான்காக நறுக்கவும்.
பிரஷர் குக்கரில் போதுமான தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
அடுப்பிலிருந்து இறக்கி ஆறியதும் தோலுரித்து மசிக்கவும்.
உருளைக்கிழங்கையும் மசிக்கவும்.
புளியை 3 கப் தண்ணீரில் ஊறவைத்து சாறு எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெயை சூடுபடுத்தி கடுகைப் போடவும்.
கடுகு வெடித்ததும் உளுந்தைப் போட்டு சிவந்ததும் பெருங்காயப் பொடியைப் போடவும்.
பின் பச்சை மிளகாய், பெரியவெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.
அதில் புளித்தண்ணீரை உப்புடன் சேர்க்கவும்.
மசித்த கத்திரிக்காயையும், உருளையையும் சேர்த்துக் கொதிக்க விடவும்.
5 நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பிலிருந்து இறக்கி சூடாக இட்லி, தோசை, தாளிச்ச இடியாப்பத்துடன் பரிமாறவும்.

குறிப்பு:- பிரஷர் குக்கரில் வேகவைப்பதற்குப் பதிலாக பெரிய கத்திரிக்காய்களை முழுதாக சுட்டும் பயன்படுத்தலாம்.

 


Image Source : https://i.ytimg.com/vi/ijOnkZgGqbQ/maxresdefault.jpg

611 total views, 1 views today

Share Button