ஃபிர்ணி

ஃபிர்ணி
Author:Thenammai Lakshmanan / தேனம்மைலெக்ஷ்மணன்

 
தேவையானவை :-


பால் – 4 கப்
பாசுமதி அரிசி – ஒரு கைப்பிடி,
ஜீனி – 1 கப்,
பாதாம் – 6, சீவிய பிஸ்தா – 6 – ஊறவைத்துத் தோலுரித்து சீவி வைக்கவும்.
ஏலக்காய் – 2
பன்னீர் – 1 டீஸ்பூன்.
சில்வர் ஃபாயில் பேப்பர் – 1,
பன்னீர் ரோஜா இதழ்கள் – சில.

 
செய்முறை:-


 

பாசுமதி அரிசியைக் கழுவித் தண்ணீரில் ஊற வைத்து, அரைக்கவும்.
பாலில் கரைத்து அடுப்பில் வைத்து சிறுதீயில் வேகவிடவும்.
அடிக்கடி கிளறவும்.
ஜீனி சேர்த்துக் கரைந்ததும் சீவிய பாதாம் பிஸ்தாவைச் சேர்க்கவும்.
ஏலக்காயைப் பொடித்துப் போட்டு இறக்கவும்.
ஆறியவுடன் பன்னீர் சேர்த்துக் கலக்கி ரோஜா இதழ்களால் அலங்கரித்து சில்வர் ஃபாயிலால் கவர் செய்யவும்.
ஃப்ரிஜ்ஜில் குளிரவைத்துப் பரிமாறவும்.

குட்டி மண் பானைகளை நன்கு சுத்தம் செய்து அதில் ஃபிர்ணியை ஊற்றிக் குளிரவைத்தும் பரிமாறலாம்.

image source: http://img.dinakaran.com/data1/DAanmeegam/Tamil-Daily-News-Paper_39238703251.jpg

189 total views, 1 views today

Share Button