பைனாப்பிள் ரசம்

பைனாப்பிள் ரசம்
Author:Thenammai Lakshmanan / தேனம்மைலெக்ஷ்மணன்

 
தேவையானவை :-


பைனாப்பிள் – 3 ஸ்லைஸ்
துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
புளி – 2 சுளை
உப்பு – ½ டீஸ்பூன்
வரமிளகாய் – 2
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
பூண்டுப்பல் – 2
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்

 
செய்முறை:-


 

பைனாப்பிளையும் பருப்பையும் குக்கரில் தனித்தனியாக வேகவைக்கவும்.
பருப்பை நன்கு மசித்து பைனாப்பிளை துண்டாக மசித்து சேர்க்கவும்.
அதில் புளியையும் உப்பையும் இரண்டு கப் தண்ணீரில் கரைத்துச் சேர்க்கவும்.
( பைனாப்பிள் புளிப்பாக இருந்தால் புளி வேண்டாம் )

எண்ணெயைக் காயவைத்துக் கடுகு சீரகம் வெந்தயம் பெருங்காயத்தூள் தாளித்து
மிளகாயை துண்டாக உடைத்துப் போடவும் மிளகு சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு
பூண்டையும் தட்டிப் போடவும்.
மஞ்சள் தூள் போட்டு கரைத்த பைனாப்பிள் பருப்புக் கலவையை ஊற்றவும்.
நுரைத்து வரும்போது இறக்கவும்.
இது நாவறட்சியைப் போக்கும்.
 


Content Source : http://thenoos.blogspot.in/

Image Source :http://tamil.webdunia.com/ta/articles/1302/10/images/img1130210006_1_1.jpg 

227 total views, 1 views today

Share Button