என் நிழல் வாழ்க்கையின் நகல் ஆரம்பித்தது: ஹன்னா விண்டர்போர்ன்

இங்கிலாந்தை சேர்ந்தவர் ஹன்னா விண்டர்போர்ன் (வயது27). நியூ கேஸ்டில் பலகலைக்கழகத்தில் எலகட்ரானிக் என் ஜினீயரிங் படித்து உள்ளார். தனது 15 வது வயதில் கல்லூரியின் ஆயுதபடை பிரிவில் சேர்ந்தார். பின்னர் அவர் படிப்படியாக ராணுவத்தில் உயர் பதவிகளை அடைந்தார். ஆணாகப் பிறந்த இவர், பூப்படையும் காலகட்டத்தில் தன்னை பெண்ணாக உணரத்தொடங்கிவிட்டார். ஆனால் ராணுவத்தில் இருந்ததால் தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரிடமும் ஆணாக நடித்து கொண்டு இருந்தார். கடைசியாக அவர் ஆப்கானிஸ்தான் பாஸ்டியன் ராணுவ முகாமில் வேலையில் இருந்தார் அப்போது

தன்னை முழுமையான பெண்ணாக காட்டி கொள்ள விரும்பினார். அதற்காக அவர் பாலியல் மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த பொய்யான வாழ்க்கை வாழ வேண்டாம் என்று முடிவு செய்தத அவர் பெண்ணாக மாறி ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்.

இதற்கு அவரது பெற்றோர்களின் ஆதரவும் கிடைத்தது. இதனால் நம்பிக்கையோடு தனது புதிய வாழ்க்கைக்கான பயணத்தை தொடங்கினார். தற்போது சிகிச்சை முடிந்து முழுமையான பெண்ணாக உருமாறியுள்ள ஹன்னா, இங்கிலாந்தின் வடக்கு யார்க்‌ஷைர்

கவுண்டியில் உள்ள கேட்டரிக் கேரிசன் நகரில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஹன்னா விண்டர்போர்ன்

நான் ஆப்கானிஸ்தானில் இருக்கும் போது நான் ஒரு போலியான வாழ்க்கை நடத்தி வந்தேன். என்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரிடமும் நான் நடிக்க வேண்டியாதாக இருந்தது.என்னால் நடிப்பதை விட்டு வெளியே வரமுடியவில்லை. உலகம் எப்படி எடுத்துகொள்ளும் என எனக்கு தெரியாது. ஆனால் இப்போது எந்த பயமும் என்னிடம் இல்லை இத்திருநங்கைக்கு திருநங்கையர் திருநம்பியர் உரிமைகுழு சார்பாக வாழ்த்துக்கள் !!!!!

என் நிழல் வாழ்க்கையின் நகல் ஆரம்பித்தது ஆறாம் வகுப்பு படிக்கும் போதுதான். ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் நம்பிக்கை உள்ள குடும்பத்தில் பிறந்தவர்கள். சிறிய குடும்பம் எங்களுடையது. நான் எப்போதும் துறுதுறுவென்று இருப்பதால் உறவுகளுக்கும் என்னை மிகவும் பிடிக்கும்.

விளையாட்டும், வேடிக்கையுமாக சென்ற என் வாழ்வின் ரயில் தடம் மாறியது அந்த நாளில்தான். அன்றிலிருந்து எனக்குள் ஏதோ குரல் ஒலித்தது. அம்மாவின் அருகாமையை விரும்பாத குழந்தைகள் உண்டா, நான் என் வீட்டுக் கடைக்குட்டி என்பதால் செல்லம் அதிகம். அன்னையின் மடிச்சுகமும். முந்தானையில் விசிறியபடி மஞ்சள் குழைத்த தாயின் கரங்கள் தலையைத் தடவியபடி பேசியதை ரசித்திருக்கிறேன்.

நாள்தோறும் குளித்துவிட்டு வரும்போது அம்மாவின் அருகாமையில் வீசும் மஞ்சளின் சுகந்தம் மயக்கியது. எனக்கும் குளிக்கும் போது மஞ்சள் பூசிக்கொள்ளத் தோன்றியது?! நிதானமாய் ஒரு நாள் பூசிப்பார்த்தேன். மாநிறத்தில் மஞ்சளின் நிறம் அந்த அழகுப் பிடித்திருக்க தினமும் குளிக்கும்போது மஞ்சள் பூசுவதும், வெளியே வரும் போது அதைக்

கலைப்பதும் வழக்கமாகிப்போனது. பாண்டிச்சேரியில் ஒரு விழாவிற்குச் சென்றபோது பீச்சில் தனியே நடந்து போய் கொண்டு இருந்தேன். ஒவ்வொரு கால்தடங்களையும் தேடிதேடி பிடித்துக்கொண்டு நடந்தபோது என் இடைஅசைவும் மாறியது. வேகமாக ஓடிவரும் அலைகளின் இரைச்சலுக்கும் என் மனதில் குழப்பங்களின் இரைச்சலுக்கும் மிக குறைந்தளவு வேறுபாடுகளே !

அங்குதான் நான் சுதா என்னும் சகோதரியைச் சந்தித்தேன். அவர்களின் மூலம் மற்றொரு தோழியின் அறிமுகமும் கிடைத்தது. அதுதான் என் வாழ்வின் மாற்றத்தை தோற்றுவித்தது. அங்கு அவர்களின் நடவடிக்கைகளும், பேச்சு வழக்கங்களும் என்னைக் கவர்ந்தன. எனக்குள் நாமும் இப்படித்தானே சில நேரங்களில் நடந்து கொள்கிறோம் என்றுதோன்றினாலும், அவர்களிடம் நேரடியாக அதைப்பற்றிப் பேச தயக்கமாகஇருந்தது. ஆனால் சுதாவும், அந்த சகோதரியும் சேர்ந்து கொண்டு, என் நடவடிக்கைகளை கொண்டே நான் நீ ஒரு சாராசரி ஆளில்லை, ஒரு திருநங்கை உனக்குள் இருக்கும் மாற்றங்களை நீ

உணரவேண்டும் என்றார்கள். முதலில் ஏற்க மறுத்தாலும் அதன்பிறகு எனக்குப் புரிந்துபோனது, சுதாவின் வார்த்தைகளில் உண்மை இருந்தது என்று. நான் என்னை ஒரு திருநங்கை என்று உணர ஆரம்பித்தேன். அதனால் வீட்டிலும் வெளியிலேயும் நிறைய சிக்கல்களை நான் சந்திக்க வேண்டி வந்தது.

இரண்டு வருடங்கள் என் போராட்டம் நீடித்தாலும் நான் செல்ல வேண்டிய தூரமும், வழியும் புலப்பட ஆரம்பித்ததால் என் போன்றோரோடு இணைந்து நான் மும்பைக்கு பயணமானேன். அங்கே என்னை அழைத்து சென்றவர்களின் மூலம் எனக்கு ஒரு குடும்பம் கிடைத்தது,

நான் ஒரு பெரிய திருநங்கையின் (சாலா) மகளாக தத்து எடுக்கப்பட்டேன். பதினைந்து நாட்கள் என்னைத் தேடி தேடி அலைந்திருக்கிறார்கள் என் பெற்றோர்கள். என்னைப் பற்றி மிக நீண்ட விளக்கத்தோடு அவர்களுக்கு நான் இருக்கும் முகவரியினையும் குறிப்பிட்டு கடிதம் எழுதினேன். குடும்பம், அன்னை, சகோதரி என உறவுகள் மும்பையில் கிடைத்தாலும், நமது உறவுகளைப் போல நெருக்கம் கிடையாது. அன்பு கிடைப்பதற்கும் கூட பணம் செலுத்திட வேண்டும். எனக்கு வேண்டிய செலவுகளை நான் செய்து கொள்ள பணம் தரவேண்டும். அதற்கு கடை கேட்டலுக்கு அனுப்பிவைத்தார்கள். முதலில் அதற்கு சங்கடப்பட்டாலும் நிலையான வருமானம் இல்லாததால் நான் வேறு வழியின்றி கடை கேட்டலுக்குச் சென்றேன். ஆபரேஷனும் நடந்தது. இன்று இம்மாதிரி ஆபரேஷன்கள் நடைமுறைப் படுத்தப்பட்டாலும், அப்போது அது கொஞ்சம் சிக்கலாகத்தான் இருந்தது. உடல் ரீதியாக என்னை கவனித்துக்கொள்வதும், என் உடல்நிலையை தேற்றியும் விட்டார்கள் புதிதாய் கிடைத்த குடும்பத்தினார். ஆனால் பணம் மட்டும் அவர்கள் குறிக்கோளாக இருந்தது. நான் அங்கிருந்து வெளியேறினேன். என் வீட்டிற்கு வந்தேன். முதலில் பெற்றோர்கள். மறுத்தார்கள். கதறினார்கள். பிறகு என்னைப் புரிந்துகொண்டு ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், என் எதிர்காலம் மட்டும் வளைந்த கேள்விக்குறியாகவே இருந்தது. நன்றாக நடனமாடும் திறன் உடைய எனக்கு இயல்பிலேயே நகைச்சுவை உணர்வும் அதிகமாக இருந்தது. நான் மீண்டும் டெல்லி பயணமானனேன். சென்னை, மும்பையினைப் போல் அங்கே கெடுபிடி இல்லையென்றாலும், என் குடும்பத்தின் பேரைச் சொன்னதும் என்னை அந்த ஜமாவில் இணைத்துக் கொண்டனர். நானும் சந்தோஷமாகவே இணைந்தேன். ஏனெனில் அந்த ஜமாவில் முக்கிய நிகழ்வே நடனமாக இருந்தது. எனக்கும் அது பிடித்திருந்தது?! குழந்தைகளின் பிறந்தநாள் விழா, திருமண விழா, இறப்பு என சகலவிதமான நிகழ்வுகளுக்கும் அழைப்பார்கள். அங்கும் பிரச்சனைகள் வேறு விதமாக தொடங்கியது.

நாங்கள் தங்கியிருந்த இடத்தில் அசைவம் சமைப்பதையும் சாப்பிடுவதையும்
வழக்கமாக கொண்டு இருந்தார்கள். நான் ஜீவகாருண்ய சன்மார்க்கத்தில் இருந்ததால்
எனக்கு சாப்பாடு பிரச்சனை ஏற்பட்டது. ஒரு ரொட்டி கிடைப்பது கூட கடினமாக இருந்தது.
உணவு விஷயத்தில் எந்த சுதந்திரமும் எனக்குத் தரப்படவில்லை, இடம் போதவில்லை,
நான் தான் சீனியர் என்றெல்லாம் பிரச்சனைகள் எழும்பத் துவங்கியது. நாளாக நாளாக அந்த பிரச்சனைகள் வலுக்க ஆரம்பித்தன. நிர்வாணம் செய்த பிறகும், சரி அதற்கு முந்திய நாட்களிலும் சரி என்னைப்
பார்க்கிறவர்கள் எல்லாரும் நான் திருநங்கை என்று உணர மாட்டார்கள். ஏனெனில்
என்னுடைய தோற்றம் பெண்ணின் தோற்றமாக இருக்கும். எனவே நான் தனியாக
செல்லும் போது இம்மாதிரி கேலி கிண்டல்களை அனுபவித்ததில்லை, ஆனால், என்னைப்
போன்ற தோழிகளோடு நான் செல்லும்போது அழகாக இனம் கண்டு கொள்வார்கள்.
டெல்லியின் பேண்டஸி வாழ்க்கை எனக்குப் போரடிக்கத் துவங்கியது. அங்கு
எல்லாருக்கும் பாய் பிரண்ட்ஸ் இருந்தார்கள். ஒருத்தரிடம் இன்னொருவர் பேசினாலே
பொறாமை தூண்டப்பட்டது வார்த்தைகள் தடிக்கப்பட்டன. கூண்டுக்குள் சிக்கிய நான்கு
நண்டுகளின் கதை போலத்தான் ஆனது என்னைப் போன்ற சிலரின் நிலைமை. நான்
மீண்டும் சென்னை நோக்கிப் பயணமானேன். இப்போது எனக்கு எதிர்காலம் கேள்விக்
குறியாய்ப் போனது நான் யோசித்துக்கொண்டே என் திறமைகளை எப்படி
வெளிக்கொண்டு வருவது என்று யோசித்துக்கொண்டிருந்த போதுதான். சிறு சிறு
நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது நகைச்சுவை கலந்து நடிக்கும்
என்னைக் கண்டு திரு. மணிக்குட்டி அவர்கள் என்னை தியேட்டர் லேப், அய்யா. ஜெயராம்
அவர்களிடம் முறையாக நடிப்பு பயிற்சி பெற்றுக்கொள்ள அனுப்பிவைத்தார். அந்தப்
பட்டறையில் மெருகேற்றப் பட்டு இன்று பல நாடகங்களில் நடித்து வருகிறேன். 10வருடப்
போராட்டங்களுக்குப் பிறகு நான் மேற்கொண்டு வரும் வாழ்க்கை முறை எனக்கு
பரிபூரண திருப்தியளித்துவருகிறது?!

எங்களுக்கு நல்லது செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை எங்களை கேலிப்
பொருளாக்காதீர்கள் நாங்களும் மனிதர்களே ?! ஏன் இதைக் கூறுகிறேன் என்றால்
முன்புமொரு முறை டிரைனில் காசு கேட்டதற்காக ஒரு திருநங்கையை நான்கு
மிருகங்கள் அடித்து துவைத்தன. அன்று அந்த நங்கையின் வலியை அவர்கள் புரிந்து
கொள்ளவில்லை, எங்களுக்கு கருப்பை இல்லை ஆனால் எங்கள் உணர்வுகளை நாங்கள்
சுமந்து கொண்டு இருக்கிறோம். அதனால்தான் சென்றமாதம் டிரைனில் ஒரு பெண் தன்
குழந்தையை பெற்றுக்கொள்ளும் நிலை வந்தபோது அந்த புதிய ஜீவனை எங்கள்
கைகளால் ஏந்தினோம். ரத்தமும் சதையும் சுமந்ததுதான் எங்கள் உடலும், சகதியைச்
சுமக்கவில்லை, ஆதரிக்கவில்லையென்றாலும் , அறுவறுக்காதீர்கள்.

364 total views, 1 views today

Share Button