கருப்பு ரோஜாக்கள் மூன்றாவது அத்தியாயம்

அரவாணிகள் உருவான விதம் குறித்து சொல் மூலமாகவும், வாய் வழியாகவும் நிைறய கைதகள் உலாவி வருகின்றன. அவற்றுள் ஒன்றுதான் ஆலய வழிபாடுகளோடு விளங்கும் ஒரு கோவில் உருவானது.
நகர்வலம் சென்ற அரசன் ஒருவன் காட்டில் கண்ட அழகியிடம் மனம் மயங்கி அவளை மணக்க கேட்கிறான். தினமும் அவைளச் சந்தித்து தன் ஆசையைச் சொல்லியும் அவள் மறுத்து வரவே, ஒரு பெளர்ணமி தினத்தன்று உன்னை இன்றே திருமம் செய்யப் போகிேறன் என்று அவளை நெருங்க கோபம் கொண்ட அந்த பெண் தர்ப்பைப் புல்லை எடுத்து அதன் மீது மந்திரத்தை உருேவற்றி அரசனின் மீது வீசினால் அத்தோடு நீ ஆண்தன்மைய இழக்கக்கடவது என்று சாபமும் தருகிறாள். ஆண்தன்மை இழந்த அரசன் தன் தவைற உணர்ந்து சாபமைடந்து மனிதப்பெண்ணாகி வந்திருக்கும் அந்த பெண் தெய்வத்திற்கு அந்த இடத்திேலேய ஆலயம் எழுப்பி வழிபாடு நடந்திட உத்தரவிடுகிறான். இன்று வட மாநிலங்களில் அந்த தெய்வத்திற்கு பூைஜகள் நடந்து வருகிறது. அத் தெய்வேம மாத்தா பெரோஜி அரவாணிகள் தங்கை பெண்களாய் மாற்றிக்கொள்ளும் சடங்கு அந்த பெண் தெய்வத்தின் படத்தின் முன்பாகேவ நடந்து வருகிறது.
ரத்தமும் சதையுமாய்
அமைந்த உடலில்
சதை மட்டுமே விலையாய்,
பிணம் தின்னும் கழுகுகள்
கூட இறந்த பின் தீண்டும்
உடல் தின்னும் கழுகுகள்
தினம் கொத்திய பின்
எச்சமாய் நான் மட்டும் !

ஜனசந்தடிக்கு சற்றும் குறைவில்லாத எங்கள் வீட்டு தெருவோரத்தின் பிளாட்பார்ம்கள் அனைத்தையும் குத்தைகக்கு எடுத்தவள் போல் எப்போதும் அவள் வாசம் செய்வது அங்கேதான் பெண்மையின் நளினம், தெளிவில்லா பேச்சு, யோசிக்கும் கண்கள், உடைலச் சுற்றிய கிழிந்திருக்கும் புடைவ என பெண்மைக்கு உரிய சில லட்சணங்கள் இருந்தாலும், அவள் ஒரு திருநங்கை பழைய சாயம் போன மூட்டைகளில் எதையாவது அடைத்து வைத்திருப்பாளர். அவைளப்
பொறுத்தவைரயில் அவையெல்லாமே விலை மதிப்பில்லாதைவகளாகத்தான் தோன்றும் போலும், ஈன்ற குட்டிகைளத் தாய் பாதுகாப்பைதப் போல் அதை பாதுகாப்பாள்.

மிஞ்சிமிஞ்சிப்போனால் அவளுக்கு 38வயதிருக்கும். நல்லதிடகாத்திரமான உடல்வாகு, கோதுமை நிறம் எப்போதாவது ஒருமுறை அவளுக்கேத் தோணும் போது குளிப்பதாலோ என்னவோ நிறம் சற்று மங்கிப்போய்த்தான். தெரிவாள். எண்ணெய் காணாத கேசம் சிக்குண்ட போதிலும் அைதத் தூக்கிக்கட்டி அதில் எைதஎைதயோ குத்தியிருப்பாள். சில நேரங்களில் மேலாஅடை கூட அவள் தவழ்ந்து கொண்டு இருக்கும். பார்ப்போரின் கண்களுக்குத் தன் உடல் விருந்தாகி தவழ்ந்து கொண்டு இருக்கும். அைத அவள் உணரவில்லை போலும்.

அந்தெத்த ரு குழந்தைகளுக்கு அவள் ஒரு பைத்தியம் … அய்… பைத்தியம் என்று கல்கொண்டு எரிவார்கள். அந்தக் கல் பட்டு கன்றிச்சிவந்திட்ட தன் உடைலப் பார்த்து அழுவாளே தவிர ஒருபோதும் கல் எரிந்த குழந்தைகைளத் துன்புறுத்திட மாட்டாள். சிலேநரம் ஆகாசத்தைப் பார்த்து கையிருக்கும் ஒரு மூட்டைய தலைக்கு அண்டைக்கொடுத்து. வெறிப்பாள். அப்போது அவள் கண்களில் இருந்து நீர் தன்னால் பிரவாகம் எடுக்கும். அவைள அவள் என்று விளிப்பதா? அல்லது அவன் என்று விளிப்பதா என்ற தயக்கம் இருந்தது. அப்போது தான் என் மைனவி தீபா அவைளப்பற்றி அறிந்தவற்றை சொன்னாள்.

அவள் பெரிய பணக்கார வீட்டில் பிறந்தவளாம். இரண்டுத் தெரு தள்ளிதான் அவளுடைய வீடு இருந்ததாம், இவள் ஒரு அலி என்று அறிந்த பின்னர் வீட்டை விட்டு அடித்து துரத்தியிருக்கிறார்கள். ஆனால் எங்கோ சென்று ஆபேரஷன் செய்து கொண்டு தன் உறுப்பை துண்டித்து உடலளவில் பெண்ணாகவே மாறி வந்து உறவுகைளக் காண வந்திருக்கிறாள். குடும்பம் மொத்தமும் சேர்ந்து அடித்து உதைத்திருக்கிறார்கள். அப்போது எங்கேயோ இடித்து இப்படி மனநிலை பிறண்டு போனாதாம். உயிர் வாழும் வரையில் இப்படி ஜென்மத்தை கண்ணில் காணக்கூடாது என்று அந்தக் குடும்பத்தினர் ஊரை விட்டே சென்றுவிட்டனர் . அன்றிலிருந்து தன்னை அறியாமல், இந்த தெருக்களில் சுற்றித்திரிகிறாள்.

நான் ரகுராமன் அவள் தன் படுக்ைகயைறயாய் நினைனத்திருக்கும் பிளாட்பார்மிற்கு எதிர் வீட்டுக்காரன், ச்சே ஆம்பிள்ளைங்க வெளியே தெருவே போகும் போது எல்லாத்தைக் காட்டிட்டு என்ன ஜென்மமோ?
பாவம் தீபா அவ என்ன வேண்மின்ன செய்யறா? ஏதாவது சாப்பிடக் கொடேன்.
போதுமே உங்க சமர்த்து ஆபீஸ்லேயிருந்து வீட்டுக்கு வரும்போதே கை ரிமோட்டை தேடுதே டீவியில் என்ன காட்டுறாங்களாம். இந்த மாதிரி மனநிலை பிறண்டவங்க மாதிரி நடிச்சு கூட மோசடி, திருட்டு நடக்குதாம்.எனக்கென்னேமா அவைளப் பார்த்தாலே பயமா இருக்கு, இந்த மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் நிறைய பலம் இருக்குமாம். ஒருவேளை நாம கிட்டபோய் பேசி நாளைக்கு வீட்டுக்குள்ளே வந்து நின்னா நான் எங்கே போறது? முதல்ல நீங்க கிளம்புங்க நான் கதைவப் பூட்டணும். நான் செல்லும் வரையில் நின்று பார்த்துவிட்டுப் போனாள் தீபா. அன்றிலிருந்து அவள் பார்வைக்குரியவள் ஆகிவிட்டாள். காலையில் காபி எடுத்துக் கொண்டு பால்கனியில் நின்றபடியே அவளின் செய்கைகளை கண்காணிக்கும் ஒருவனாகிப் போனேன் நான். என்னால் எத்தைன முயன்றும் அதை மாற்றிக்கொள்ள இயலவில்லை, என்ன பைத்தியம் என்றாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவள் இல்லையா? வாழ்ந்து கெட்டவன்(ள்) போலிருக்கிறது. பைத்தியம் ஆகிப்போனாலும் அந்த உருவத்தில் ஒரு நேர்த்தி இருந்தது.

சில விடைலைப் பையன்களும் அந்த ஏரியைா மைனர்களும் அவைளச் சுற்றிச்சுற்றி வருமபோதும், அசிங்கமான வார்த்தைகளால் அவைள இம்சிக்கும் போதும் மனம் கனக்கும். தன்னையே அறியாத ஒருத்தியை எப்படி வார்த்தைகளால் இம்சித்து, பொம்பிளை மாதிரியே இருக்கியே உனக்கு இது எப்படி இருக்கும் என்று தவறான இடங்களில் வைக்கும் போதும், அழுவாளேத் தவிர, எதிர்க்கமாட்டாள்.

அதை பற்றி பேசினாளே தீபா கோபமுறுவாள் எவனோ என்னமோபே சிட்டு போறான் நீங்க யாரு வக்காலத்துவாங்க, அக்கம் பக்கத்து ஜனங்கதான் ஒரு அவசரத்துக்கு வருவாங்க, அவங்கைளப் பைகச்சிக் வேண்டாம் சென்னையில் பக்கத்துவீடு எரிந்தால் கூட மற்றவர்கைளப் பொறுத்தவைரயில் அது ஒரு நிகழ்வுதான். அச்சச்சோ என்று சூள்கொட்டி விட்டு தன் அடுத்த வேலைகளை பார்க்க போய்விடுவார்கள் என்று அவள் அறிந்திருக்கிறாள். தீபாவின் நிம்மதியை கெடுக்கவும் மனமில்லை, நானும் இதே சென்னைவாசிதானே அடுத்தவீட்டு நெருப்பு என் வீட்டில் பிடிக்காதவைர நிம்மதியே என்று வாழ்பவனாயிற்றே?

தீபா தன் சொந்த ஊருக்குப் போயிருந்தாள். நான் தெருமுனையில் உள்ள டீக்கைடயில் டீ குடித்துக்கொண்டு இருந்தேன். வழக்கம் போல் அங்கே எங்கோ எடுத்து வந்திருந்த பழைய நெளிந்த வளையல்கைள ஒவ்வொன்றாய் தான் கைகளுக்குள் திணித்து அழகு பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். நிறைய அடுக்கிவிட்டை கையை மேலே உயர்த்தியும், கீழே இறக்கியும் அதில் எழும் சப்தங்கைளக் கண்டு புன்னகை செய்யும் அவைளேய பார்த்துக்கொண்டு இருந்தேன். நான் என்ன நினைதாளோ தெரியவில்லை திடுமென எழுந்த நேராக என்னை நோக்கி வர ஆரம்பித்தாள். உறுத்துப்பார்த்துவிட்டு, மாமா எனக்கு டீயும் பண்ணும் வாங்கித்தர்றீயா? என்றாள்.

மாமா என்று அவள் என்னை அைழத்ததும், சுற்றியிருந்தவர்களின் பார்வை என்மேல் விழுந்த சங்கோஜத்தில் டீக்கைடக்காரரிடம் பணத்ததை் கொடுத்து அவள் கேட்பதைத் தரச் சொன்னேன்.
ஏய்…என்னையல்லாம் பார்த்தா மாமான் தெரியைலயா ? வர்றீயா நான் பிரியாணி வாங்கித்தர்றேன் என்று அங்கிருந்த ஒருவன் அவளிடம் நெருங்கினான் அசிங்கமாய் இளித்தபடி,
சார் விடுங்க அதுவே மனநிலை சரியில்லாத பொண்ணு அதைப்போய் கிண்டெல் செய்யலாமா ? எப்போதுமே நம்மை விட சக்தியில் குறைந்தவர்கைள நாம் ஏளனெம் செய்யக் கூடாது என்று அவனுக்கு அறிவுரை கூறிய என்னை் பார்த்த பார்வையில் குரோதம் இருந்தது.

அன்றிரவு… கரண்ட் கட்டாகியிருந்தது, காற்றுக்காக ஜன்னைலத் திறந்து வைத்துவிட்டுப் படுத்தேன். விடிவதற்கு இன்னும் கொஞ்ச நேரம் இருந்தது, திடுமென ஏதோ சப்தம், முனகலா? அலறலா தெரியவில்லை , ஏதோ ஓலமிடுவைதப்போல் என்னவாக இருக்கும் என்ற நினைப்பில் பால்கனிக் கதைவத் திறந்து எட்டிப்பார்த்தேன். அங்கே நான் கண்ட காட்சி உறையவத்தது . ஒரு காமுகன் அவன் முகம் அவ்வளவ தெரியவில்லை , அவைள அவைள அந்த வாய் செத்த ஜீவைன கடவுளே! அவளின் அலறல் பலவீனமாகிக் கொண்டே வந்தது.

….திபாவிற்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒண்ணும் பேசாமல் அங்கிருந்து அகன்றுவிட்டாள். வழக்கம் போல் அலுவலகம் கிளம்பும்போது பவுனைப் பார்த்தேன். மறுபடியும் அதே வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தாள். எனக்குள் உறுத்தலாக இருந்தது. எதிர்ப்பட்ட ஒவ்வொருவைரயும் இவனா இவனா என்று கேட்கத் தோன்றியது. எத்தனை கீழ்ப்பிறவியாக இருந்திருக்க வேண்டும் அவன். எத்தைன முறை தேற்றியும் என்னால் கோபத்தைக் கட்டுப்படுத்திட இயலவில்லை, அன்றிலிருந்து இரவில் அவ்வப்போது எழுந்து பால்கனிப்பக்ம் சென்று பார்த்துக்கொண்டிருப்பேன்.

அலுவலக வேலை விஷயமாக எனக்கு வெளியூர் செல்ல வேண்டியிருந்தது மூன்று நாள் கழித்து நான் அங்கே வந்தபோது தெருவே கூட்டமாய் இருந்தது, என்னாச்சு வேகமாய் நுழைந்துப் பார்த்தேன். பவுனு சுவரோரம் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள்.

அவைளச் சுற்றிலும் உதிரம் சூழ்ந்திருந்தது, கூட்டத்தில் நின்றிருந்த தீபா என்னருகில் வந்தாள்.
என்னாச்சு,,,, என் விழிகள் என்னேரம் கொட்டிடத் தயாராக இருந்தது நைட் யாரோ இரண்டு பேர் அவகிட்டே மோசமா ………. இரத்தம் ரொம்பவும் போகுது. எல்லாரும் பார்த்துட்டே இருக்காங்கேளத் தவிர யாரும் எதுவும் செய்யலை, ஆம்புலன்ஸக்கு போன் பண்ணினேன். போங்க போய் அவளுக்கு உதவி செய்யுங்க . நான் தீபாவைத் திரும்பிப் பார்தேன். இனிமே யார் என்ன நினைதாலும் கவைலயில்லை இல்லைங்க, இந்த நிலையிலே உள்ள ஜீவனிடம் மிருகத்தனமா நடந்துக்க எப்படித்தான் மனசு வந்ததோ, அவ பிழைக்கிறது கஷ்டம். தீபா அழுதாள், பவுனை வேனில் ஏற்றினார்கள், நான் அன்று அவளுக்கு போற்றிய புடைவையத்தான் உடைலச் சுற்றியிருந்தாள். பவுனைப் பார்த்தேன். அழுகையோடு அடிவயிற்றைப் பிடித்தபடியே என்னைப் பார்த்தாள். வழக்கம் போல் மெளனமாய் நின்றேன். ஏனோ இன்றளவும் அவள் என் மனைத விட்டு அகலவில்லை, அதன்பிறகு அவைள அந்த தெருவில் நான் பார்க்கவில்லை, அவள் விட்டுச்சென்ற எச்சமாய், சில பல மூட்டைகளும் கூட இப்போது காணாமல் போயிருந்தது, அந்த பிளாட்பார்ம் அரியைண தன் ராணியை பறிகொடுத்து பாவமாய் நின்றது. என் பால்கனிக் கதவுகள் மூடியே இந்தது, மனம் மட்டும் அந்தப் பாவப்பட்ட ஆண்பிப்பு பெண்ணாய் மாறிபட்ட வேதைனக சுமந்த பெண்ணின் நினைவுகளோடு…..!

380 total views, 2 views today

Share Button