ச்சீ! லெக்கின்ஸ் ஆபாசம்

avச்சீ! லெக்கின்ஸ் ஆபாசம் 😡😡😡

அண்ணா!அந்த பச்சை சுடிதார் கொடுங்க .

நீங்க அந்த செக்‌ஷன் போய் பாருங்க. xL xxL அங்க தான் கிடைக்கும் .

ஒன்றிக்கும் உதவா கலர்கள்…சைக் ! அண்ணா அந்த வாடாமல்லி பின்க் சுடி எடுங்க.

சாரிம்மா! இது சின்ன சைஸ் மாத்தி வச்சுட்டாங்க… சரவனா! டேய் சரவனா!! மேடத்துக்கு மெட்டிரீயல் எடுத்து போடு!! நீங்க அங்க பாருங்க மேடம்! புதுசா நிறையா வந்திருக்கு

நம்ப ரெடிமேட் தான வாங்க வந்தோம் என எண்ணி நாலடி வைப்பதற்குள்ளவே “எந்த ரேஞ்சுல பாக்கறிங்க மேடம்? மெட்டிரீயல் காட்டன், சில்க் காட்டனா…” என அவர் அடுக்கி கொண்டு போக ஏதோ ஒன்றை வாங்கி வீட்டிற்கு வந்தேன்.

ஆபிஸில் வேலைப்பார்க்கும் சக ஊழியர்களுள் தோழி ஒருத்தி… நீ அண்ணா நகர் வேவ்ஸ் ட்றை பண்ணியா?? உனக்கு பிட் ஆகுற மாதிரி மார்ட்ன் ட்றெஸ் இருக்கு!

அட்றா சக்க! மாலையே வேவ்ஸ் அடைந்தோம்.அடடடா! 3xLல்ல கூட அட்டகாசமான கலர். “ப்ளிஸ் பாக் இட்” சொல்லி முடித்தவுடன் கிடைத்த அந்த ஆத்ம திருப்த்தியை சொல்லில் வர்ணிக்க சாக்ரட்டீஸாலும் முடியாது.

உங்க ட்றெஸ்லாம் எங்க எடுக்கறிங்க? விலை கூடுதல்ல?? என பேஷியல் செய்துகொண்டே இருந்த அந்த அழகுநிலைய பெண் கேட்க! க்ரீம்களின் ஊடேயும் என் முகம் கருத்தது.

கஸ்டமர் ஒருத்தங்க! உங்களவிட இன்னும் குண்டா இருப்பாங்க அவங்க சிம்பிள்ளா ஒரு ஐடியா சொல்லிட்டு இருந்தாங்க ரேகா’க்கு… நீங்க கூட ட்றை பண்ணுங்க. உங்களுக்கு பிடிச்ச புல் ஹாண்ட் சுடிதார் கூட தைக்காலாம்.

அப்படியா?? என்னவாம்??

அது ரன்னிங் மெட்டிரியல் எல்லா கடையிலும் கிடைக்குது இப்போ. அதுல உங்க டாப்ஸ்க்கு தேவையான மெட்டிரீயல் எடுத்துக்கோங்க. லெக்கிங்ஸ் வித் துப்பட்டா வெறும் 100 ரூபா தான்! தையல் கூலி உட்பட 300 தான் ஆகும் மேடம். காசுவல் வேரா கூட யூஸ் பண்ணிக்கலாம். இப்போ பொண்ணுக எல்லாம் இது தான் போடுதுக.

அப்படியாக தான் லெக்கின்ஸ் என்னிடம் அறிமுகமானது.

டீ! இதென்ன சின்னதா இருக்கு எனக்கு பத்துமா?? என தோழியிடம் கேட்டது சேல்ஸ்கேர்ள்க்கு கேட்டுவிட்டது. மேம்! பனியன் க்ளாத், எக்ஸ்பாண்டிபில், xl தான் தரேன் அதெல்லாம் கண்டிப்பா பத்தும், ட்ரையல் கிடையாது . நீங்களே அடுத்த தடவ கேட்டு வாங்குவிங்க என்றதும் ப்ளாக்ல ஒண்ணு கொடுங்கனு வாங்கி வந்தேன்.

வாங்கி வந்தது ஏனோ கிடப்புலையே கிடக்க. அயர்ன் பண்ணிய பாண்ட் அன்றைக்கென பொசுங்கியது. ஆபத்துக்கு பாவமில்ல இந்த சுடிக்கு அந்த பளாக் லெக்கின்ஸ் சூட் ஆகும்ல என அணிந்து ஆபிஸ்ஸும் வந்தாச்சு. ஒரு இலகுவான உணர்வு எடை 10 கிலோ குறைந்தது போன்றதொரு மகிழ்ச்சி. என்னா சாப்ட்… என மீண்டும் 6 கலர்கள் வாங்கினேன் , அழகுநிலைய பெண்ணின் அறிவுரையின்படி ரன்னிங் மெடீரியல் டாப்ஸும்.

அடடே லெக்கிங்ஸ் அசத்தல் என்று களிப்பில் வாழ்ந்துவந்த எனக்கு குமுதம் ரிப்பொர்ட்டரின் லெக்கின்ஸ் தலைப்பு தூக்கிவாரி போட்டது.

அதில் ஒரு மெல்லிய பெண்ணின் புகைப்படம் கூட இல்லை அத்தனையும் எடையுள்ளவர்களே. ஆபாசம் என்று பகடிகள் வேறு.

அடபாவிகளா! என் உடல் அவ்வளவு தான். எந்த ஆடை அணிந்தாலும் பருமனாக தான் தெரிந்திட போகிறேன் , இதில் எனக்கு இலகுவான உடை அணிவதில் என்ன தவறு?

ஆபாசமாக தெரிய யாரும் அணிவதில்லை. உங்கள் கண்களுக்கு எங்கள் பருமனே சகிக்கவில்லை போலும் அதை ஆபாசம் என்று பெயரிட்டு கேவலமும் அள்ளி தெளித்தாகிவிட்டது

பெண்கள் என்றால் மெலிதாக இருக்க வேண்டும் என்ற உங்கள் கோட்பாடு மண்ணோடு மண்ணாகட்டும். என்னுடலை என்னையே வெறுக்க செய்த பாவம் உங்களையே பிடிக்கட்டும்.

நாங்களும் பெண்கள் இல்லையா?? ஆடை அணியும் சுதந்திரத்தை விடுங்கள்… ஆசைக்கூட பட கூடாதா??

120 கிலோவிலும் நோ சுகர் நோ கொலஸ்ட்றால் உண்டு. 50 கிலோவில் அல்சர்களும், ஒரு தண்ணீர் குடத்தை தூக்கும் திராணியற்றவைகளே பல!

உங்கள் காம பார்வைகளுக்கு இதமாய் அவர்களே வண்ண உடைகள் அணியட்டும்! லெக்கிங்ஸ் என்ன ? வேறென்ன கருமமும் அணியட்டும்.

அழகு உடலை பொறுத்து தான் என்று இந்த சமூகம் எங்களை “ஃபாட் டிஸ்க்ரிமினேட்” பண்ண தொடங்கியப்பின் இனி லெக்கின்ஸ்ஸாவது மண்ணாவது … பர்தாவையே ஏற்கிறேன்.

இந்த சிலிண்டர்களுக்கும் மனசுண்டு. லெக்கின்ஸ் ஆபாசத்தை “குண்டர்” சட்டம் என மொழிபெயர்! ‪#‎செத்துமடி‬

https://www.facebook.com/niranchana.rajamanickam/posts/10153747674213267

https://twitter.com/_thara__

2,071 total views, 1 views today

Share Button