அக்னிப் பறவைகள் : அத்தியாயம்-5

-லதா சரவணன்

pic 2

சென்ற வாரத் தொடரில் நாம் பெண்களின் இழிநிலைப் பற்றி குறிப்பிட்டு இருந்தோம் அதைப் படித்து சீரணிக்க முயல்கின்ற போது இன்னும் இரண்டு செய்திகள் வெளியாகி நம் நெஞ்சை கணக்க வைத்து விட்டன.
ஆம் ஐ.டியில் பணிபுரியும் உமா மகேஸ்வரியின் கொடுமையான இறப்பு, யார் தீர்மாணிக்கிறார்கள் இந்த பெண்களின் இறப்பையெல்லாம்,இறைவனா,சூழ்நிலையா,சமூகமா? தனிமனித ஒழுக்கமற்ற வெறிக்கு ஆட்பட்ட நிலைகள்தான் இவர்களின் இறப்புகள் என்று சொல்லலாம்… எதிர்கால வாழ்வை ஆசையோடு எதிர்பார்த்துக் கொண்டு இருந்த ஒரு மலர், தன் திருமணத்திற்கு தானே பணம் சேர்த்து வைத்து ஆசைப்பட்ட மாமன்மகனையே மணக்க நாட்களை எதிர்நோக்கிக்கொண்டு இருந்த ஒரு பெண் அவளின் வாழ்க்கை இப்படி நிமிட நேரத்தில் முடிந்து போய்விடுமோ? ஆம் என்று கட்டியம் கட்டியம் கூறியிருக்கிறதே உமாமகேஸ்வரியின் இறுதி சடங்குகள்

மகளிர் தினம் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம் அநேக மகளிரைப்பற்றி வரிசையாகப் புகழ்ந்து பேசிக்கொண்டு இருக்கிறோம் நாமெல்லாம் இறந்தவர்களின் புகழ்பாடுவதை விடுத்து,வாழ்பவரின் நலனுக்காக பாடுபாட வேண்டாமா? நமக்கெல்லாம் எங்கே அதற்கான நேரமும் காலமும் இருக்கப்போகிறது நம் வேலையென்ன சமூகத்தின் மேலுள்ள கோபங்களையெல்லாம் வெறுமனே பேச்சுக்களால் வெளிப்படுத்துவது மட்டுமே. ஏழு நாட்கள் அங்கே அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் பிணம் காமிராக்களின் வெளிச்சத்திற்கு வர காத்திருந்திருக்கிறது. காலையில் அன்னையிடம் பேசியிருக்கிறார். மாலையில் கிளம்பும் போது தோழியிடம் சொல்லியிருக்கிறார்,இடைப்பட்ட இரண்டுமணி நேரங்களில் தன் உயிரைவிட்டு இருக்கிறார். இத்தனை கொடூரமான் இறப்பதற்கு அவர் பெண்ணாய் இருப்பது மட்டும் காரணம்.

இது ஒருவிதம் என்றால் இன்னொன்று பத்து வயது சிறுமியின் பலாத்காரம் இதை பலாத்காரம் என்று குறிப்பிடுவதற்கே எனக்கு மிகுந்த வேதனையாகத்தான் இருக்கிறது.குழந்தை,சிறுமி, கண்ணிப்பெண், நடுத்தரபெண்மணி,வயதான கிழவி என ஒவ்வொருவரும் இந்த பாலியல் கொடுமையைச் சந்திக்க காரணம் என்ன? அவர்கள் வெறும் தோலுரித்த சதைப்பிண்டங்களாகத்தான் பார்க்க்ப்படுகிறார்களா? ஒரே ஒரு வரியைத்தான் நான் சொல்கிறேன். பெண்களின் மார்பகத்திற்குள் இருக்கும் மனதையும் பாருங்கள் என்று. அவளுக்கும் ஆசாபாசங்கள் இருக்கும் யாரோ ஒருவரின் அன்பான பெண்ணைத்தான், அவர்களின் குடும்ப விளக்கைத்தான், நாளை எதிர்காலம் கல்யாணம் என்று விதவிதமான கனவுகளைச் சுமந்து வரும் பெண்களைத்தான் நீங்கள் சின்னபின்னமாகச் சிதைக்கிறீர்கள். அதில் சிற்றின்பம் காண்கிறீர்கள். அன்னை
தந்தையின் அருகில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த பத்துவயது சிறுமி சிறுநீர் வீட்டுக்கு பின்புறம் வந்திருக்கிறாள். அவளைக் கடத்திய எதிர்வீட்டுக் காரம் கூடவே ஐந்துபேர் அந்தப்பிள்ளை பட்டிருக்கும் பாட்டை எண்ணிப்பாருங்கள் நாம் எதற்கு உட்படுத்தப்படுகிறோம் என்றே அறியாமல் அந்த பிள்ளை கொடுமையை
அனுபவித்திருக்கிறது, இறந்தபின்னும் அந்த பச்சிளம் பிள்ளையை விடாமல் தன் மூர்க்கதனத்திற்கு ஆட்கொண்டு இருக்கின்றனர். அந்த மிருகங்கள். இல்லை இல்லை மிருகங்கள் கூட ஒரு அங்குசத்திற்கும், குச்சிக்கும் அடங்குகிறது ஆனால், இவர்கள் நரகல்கள்.

டெல்லியில் 6வயது சிறுமியைக் காணவில்லை என்று அதன் தாய் அக்கம் பக்கம் எல்லாம் தேடியிருக்கிறார். அந்த சிறுமியோ பக்கத்து வீட்டில் பழைய பொருட்கள் போட்டு வைக்கப்பட்ட அறையில் இரண்டு நாட்கள் கொடூரமாகச் சிதைக்கப்பட்டு இருக்கிறார், அந்த சிறுமியின் பெண்ணுருப்பில் கால்லிட்டர் கண்ணாடிப் பாட்டிலைச் சொருகி வேடிக்கை பார்த்து இருக்கிறது அந்த பக்கத்து வீட்டு வெறியன். நாயைப் போடுவதைப் போல் மூன்றாம் நாள் காலையில் சிதைக்கப்பட்டு உயிர் மட்டும் ஊசலாடியபடி கிடந்த பிள்ளையைக் கண்ட அந்தத்தாயின் மனம் என்ன பாடுபட்டு இருக்கும் எங்கே இருக்கிறாள் என்று ஊரெல்லாம் தேடிக்கொண்டு இருக்கிற போது தன் பக்கத்து வீட்டிலேயே சிறைவைத்து சித்தரவதை அனுபவித்து பிள்ளை இருந்துருக்கிறாள் என்றால் எத்தனை கொடூரமான விஷயம் அது. சிறுமிகள் மீது மட்டும் அல்ல நடுத்தரபெண்மணிகள் மீதும் இந்த வக்கிரங்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கேள்விப்பட்ட விஷயம் ஒன்று மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது.

விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது, உலகத்தையும் நம் கையில் கொண்டு வந்திடும் உபகரணங்களும் வளர்ந்திருக்கிறது ஆனால் பெண்களின் பாதுகாப்பு மட்டும் அதள பதாளத்தில் தள்ளப்பட்டு இருக்கிறது போட்டோ ஸ்டுடியோவிற்கு சென்ற பெண்ணின் புகைப்படத்தை எடுத்து தவறான தொழில் செய்யும் பெண்களின் வெப்சைட்டில் போட்டு அவளை வெளியே தலைகாட்ட முடியாமல் செய்தது, காதல் என்று வலைவிரித்து, பெண்ணின் உணர்வுகளைத் தூண்டி அதையும் படம் பிடித்து விற்கும் வக்கிரத்தனமாக விடயங்களை நாம் தினம் ஒருதர்மேனும் சந்தித்து தான் வருகிறோம். பெண்கள் எல்லா விஷயத்திலும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். கூடுமான வரையில் இயல்பாக உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள் பெண்கள். நம் வீடு ஒரு பூந்தோட்டம் எத்தனையோ பெண்களுக்கு மோசமாம் இல்லறம் அமைகிறது.வேலை பார்க்கும் எந்திரமாகவும்,பணம் கொழிக்கும் மரமாகவும்,குடும்பச்சுரண்டல்களுக்கு மாற்றாக் தேடும் நட்பே இறுதியில் எமனாக வந்து விடுகிறது. திருமணமாகும் வரையில் பெண்ணுக்கு தாய் தந்தை உலகமாகிறார்கள். எந்த விஷயம் ஆனாலும்,அவளை விட்டுத்தராமல் கண்ணாய் காக்கிறார்கள். அதுவே கல்யாணமாகிவிட்ட பிறகு
கணவன் வீடு மட்டுமல்ல தாய் வீடு கூட அந்நியமாகித்தான் போகிறது.

ஒரு விருந்தாளியைப் போல் வந்து தங்கிவிட்டு செல்லத்தான் முடிகிறதே தவிர, எந்த உரிமையும் கொண்டாடிட முடியாது. அவள் திருமணத்திற்கு பிறகு தனித்து விடப்படுகிறாற்கள். ஓவ்வொரு தனக்கென்று எந்த எதிர்பார்ப்பும் இன்றி பழகிட ஒரு ஜீவன் இல்லையே என்று தவிக்கிறாள்,அந்தத் தவிப்பின் வெளிப்பாடுதான்
அலுவலகம் செல்லும் போது நண்பர்களிடம் தன்னையும் மீறி தன் அந்தரங்கத்தை பகிர்ந்து விட தோன்றுகிறது. அப்படி அவளிடம் பழகும் எல்லாருமே ஏதோ தேவதூதர்கள் போலவும்,மனைவிக்கு மரியாதை கொடுப்பதைப் போலவும் பேசுவார்கள். அதே நேரம் உன் குடும்பத்தினரைக் காட்டிலும் நீ எனக்கு முக்கியம் என்று அந்த பெண்ணில்ம் பழகி நட்புணர்வை ஏற்படுத்திக்கொண்டு பிறகு டன் மாயவலையை விரிக்கிறார்கள்.பெண்களும் அதில் அழகாக ஏமாறுகிறார்கள்.

துபாயில் வேலை பார்க்கும் கணவன். மனைவி இரண்டு பிள்ளைகளோடு தாய் வீட்டில் இருக்கிறார்கள். குழாயில் தண்ணீர் வரவில்லை, அடைப்பெடுக்க வரும் பிளம்பரிடம் தேவையில்லாமல் வாய் கொடுத்து தன் கணவர் ஊரில் இல்லை என்பதையும் வெளிப்படுத்திவிடுகிறார்கள். அவன் அவள் குளியல் அறையில் சிறிய கேமிராவைப் பொருத்தி வைத்து விடுகிறான். ஷவரைத் திறக்கவும் கூடவே கேமிராவும் திறந்து அந்தப்பெண்ணின் அழகை உள்வாங்கிக்கொள்கிறது. மீண்டும் எல்லாம் ஒரு நாள் சரியாக இருக்கிறதா என்று சோதிப்பதைப் போல் கேமிராவை எடுத்து விடுகிறான். அந்த பெண்ணின் வீடியோவை நெட்டில் அப்லோட் செய்து பணம் சம்பாதிக்கிறான்.இப்படி தனக்கு தெரியாமலேயெ பெண்கள் அவதிக்குள்ளாகிறார்கள். பஸ்ஸில் செல்லும் போதும்,கோலமிடும் போதும்,கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கும் போதும், தவறான கோணங்களில் பெண்கள் படம் பிடிக்கப்படுகிறார்கள். அந்நியர்களை ஒரு அடித் தள்ளி வைக்கவேண்டும், எப்போதும் உடல் முழுக்க கண்களோடு இருந்தால்தான் பெண் இம்மாதிரி சந்தர்ப்பங்களில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள முடியும்.

காதலுக்கு ஒப்புக்கொள்ளவில்லையென்று ஆசீட் வீசி உயிரை இழந்த விநோதினி, உன்னை எனக்கு பிடிக்கிறது என்று ஒரு ஆண் தன் விருப்பத்தை வெளியிட உரிமையிருக்கும் போது, எனக்கு உன்னை பிடிக்கவில்லை என்று சொல்ல பெண்ணுக்கும் உரிமையிருக்கிறது அல்லவா, ஆனால் அப்படிச் சொல்லிவிட்டால் உடனே அவளைப் பற்றி அவதூறு பரப்புவது, இல்லையென்றால் கொலை செய்ய முயற்சிப்பது,அல்லது திராவகம் வீசுவது, இதெல்லாம் இப்போது பெருகி வருகிறது. பாண்டிச்சேரி விநோதினிக்கு நிகழ்ந்த கொடுமை அறிந்ததுதானே.

விநோதினியின் வேதனையில் கருகிய பூக்களின் வரிகளாய்…

பிறந்திருந்தேன் நான் அழுகையின் குரலைக் கடன் வாங்கி நான் இருக்கிறேன் என்னைக் கவனி என்று அன்னைக்கு அறிவுறுத்திக்கொண்டு, அதரங்கள் அறிந்த முதற்சுவையாம் அன்னையின் அமுதத்தில் திளைத்து பிள்ளைபாசமென்னும் முத்தக்கட்டிலில் உறங்கியிருந்தேன்.

நான்கு கால்களில் நான் இழுத்து தள்ளிவிட்டு சென்ற பொருட்களையும், கருவண்டுக் கண்களில் குறும்பு கூத்தாட ஆடிக் களித்த பொழுதுகளையும்,பட்டுடுத்தி,மையிட்டு திருஷ்டி எடுத்த காலங்களில் கூட நான் இத்தனை அழகாய் பூத்திருப்பேன் என்று எண்ணினேனா,

விழிகள் இரண்டில் ஆயிரம் கனவு விதைகள் பயிராகும் காலத்தை எண்ணி ஏங்கியிருக்க கருகும் வாசனையை என் நாசி அன்று உணர்ந்திருந்தால், நான் பிஞ்சாகவே இருந்திருப்பேனே,
இறைவா விதியை அறிந்து கொள்ளும் அறிவை செய்,வினையை அறுக்கும் திறனை கொடு,

நான் நில்வொளியில் மிதந்தேன் எனக்குள்ளே ரசனைகளை புதைத்திருந்தேன் நானே புதையப்போவதை அறியாமல்….
உற்சாகம் தொற்றிக்கொள்ள பிள்ளைகிளியாய் தந்தையின் தோளில் பள்ளியாண்டு வெற்றிபெற்றேன் என்று குதித்ததும், என் பெண் என்று கொண்டாடி நெற்றியில்
முத்தமிட்டு கண்ணீர் துளிர்த்தததும்,

கல்லூரிப் பட்டாம்பூச்சியாய் சிற்கடித்து.எட்டிப் பிடிக்கும் தூரம் வானம் என்று இறுமாந்து,மேகத்திற்குள் சிறகு விரிக்கக் காத்திருந்த சமயம் இரையை பிடுங்கிய குழைந்தையின் மனம் போல், அன்று காலையில் இருந்தே ஏதோ இனம் புரியாத ஏக்கம் படர்ந்திருந்தது. என்ன குறையெனக்கு படிப்பு,என்னைத் தாங்கிய தோள்களை, தவழ்ந்த மடியை,பாதுகாப்பை அன்பை உணர்த்திய விரல்களை காக்க நல்ல பணியில் சேர்ந்து விட்டேன்.இனியென்ன,

ஓஹோ திருமணம் என் வாழ்வின் அடுத்த கட்டம். நான் கட்டிலின் மேல் வரப்போகும் கணவனைப் பற்றி தீவிரமாக கனவுகள் காணவில்லை, தொலைக்காட்சித் தொடர் கதாநாயகி போல காதலனுக்காய் காத்திருக்கவில்லை,ஏன் எண்ணப்பின்னல்கள் கூட உதிக்கவில்லை,எங்கிருந்து முளைத்தான் அவன்,திடுமென்று வந்து காதல் என்னும் அஸ்திரத்தை வீசியவுடன் காலில் விழவேண்டுமென்று நினைத்தானோ,,,, அவனின் பார்வைக்கு வாழ்வாய் நான் தெரிந்திருக்கிறேன். என் பார்வைக்கு அவன் ஒரு வரனாய் கூட தெரியவில்லையே, நேசிப்பை வலிக்காமல் ஒதுக்கினேன்.

என் உறவுகளை சந்தித்து திரும்பும் போது எங்கிருந்து திடுமென்று முளைத்தான். அத்தனை கொலைவெறியை அந்தக் கண்களில் இதுவரையில் நான் கண்டது இல்லையே, இறுதியான அவன் சிரிப்பில் கூட கொடூர ஏளனம் இருந்தது அன்று என் கண்களுக்கோ, மூளைக்கோ சற்றேனும் உரைத்திருந்தால் நான் தடுமாறியிருக்காமல் என்னை நோக்கி வந்த திராவகத்தை தடுத்திருக்கலாமோ?

நிகழ்ந்து விட்டது, சிறு கீறலைக் கூடதாங்கிக்கொள்ள முடியாத என்னால் எப்படி அந்த தீயை தாங்கிக்கொள்ள முடியும் துடித்தேன். சிறு வயதில் மெழுகுவர்த்தியில் தீய்ந்த விரலுக்கு எண்ணையிட்டு என்னை தன் தனத்தில் சாய்த்துக் கொண்டு நானிருக்கேன் என்று மார்பில் இருத்திக்கொண்டு தாயை தேடுகிறது என் மனம். அம்மா… அம்மா… நான் அனத்திக்கொண்டு கிடக்கையில் எண்ணிய எண்ணம் நிறைவேறி எதோ உலகசாதனைப் புரிந்தவனை அடித்து உதைக்க வேண்டும் என்று மனம் ஆசைப்பட்டது.
ஆனால் பதறிய தந்தை, தலையில் அடித்துக்கொண்டு அய்யோ என் மகளே என்று கதறியதுமே நான் நினைவிழந்தேன்

மருந்துவனையின் நெடியின் உடலில் மாற்றங்களை உணர்ந்து தீய்ந்து போன தசைகளை நீவியபடி நின்ற தாயிடம் அம்மா எனறு உடைந்தழவும் இயலாமல் கனவுகள் தேங்கிய கண்களில் இன்று கண்ணீர!

எனக்காக எத்தனையோ விழிகள் அழுதன, எத்தனையோ உதடுகள் பேசின, ஆயிரக்கனக்கான விரல்கள் போராடின, நான் இதோ என் கனவுகள் நசித்து, கண்ணாடிள் மறுக்கப்பட்ட கவிதையாய், கிழிக்கப்பட்ட காகிதமாய், கலைக்கப்பட்ட ஓவிமாய். படுக்கையில்…..மீண்டு விடுவேன் என்ற நம்பிக்கை இழை கொஇஞ்சமேனும் ஒட்டிக்கொண்டிருக்க, தகர்ந்து போன கட்டிடமாய் உதிர்த்தது என் இறுதியான நினைவுகள்………..!

நான் சடலமானேன். விநோதினி என்னும் புத்தகம் முடிவுரையை போர்த்திக்கொண்டது. சுமந்திருந்த சிலுவைகள் போதும் என்று இறங்கி வைத்த பெண்ணின் நினைவுகள் நம்மில் சிலுவைகளாய்…

பெண்கள் இழிப்பொருட்களாய் பாவிக்க காரணம் என்னென்று ஆராயுங்கள் ஒருவகையில் மறைமுகமாக நாமும்தான். நம்முடைய வளர்ப்பு முறையும்தான். யாராலும் என் பிள்ளைக்கு தீங்கு நேரக்கூடாது என்பதில் எந்த அளவு உறுதியாக இருக்கிறோமோ அதே அளவுநம் பிள்ளையாலும் யாருக்கும் தீங்கு நேரக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும். இயல்பாக இன்றைய பிள்ளைகள் புத்திசாலிகள் அவர்களின் கவனம் எதில் எல்லாம் சிதறடிக்கப்படுகிறது.

ஒரு நிகழ்வு ஒன்றில் குழந்தைகள் விட்டை விட்டு வெளியேற காரணம் என்ன? என்று கலந்தாய்விற்குச் சென்றிருந்தேன். இந்தக்கால் பிள்ளைகளுக்கும், நாம் கடந்து வந்த பாதைகளில் அனுபவித்த பிள்ளைத் தன்மைக்கும் நிறைய வேறுபாடு இருந்தது. சுமையின்றி அரிசி உமிமைப் பரப்பி ஆதி எழுத்தான் ‘அ’ வை கையைப்பிடித்து எழுதச் சொல்லித் தருவார்கள். அது உறவினர் கூடி நடத்தும் விழாவாகவே இருக்கும். தான் எதையோ புதியதாய் கற்றுக்கொள்ள போகிறோம் என்று அந்தக் குழந்தைக்கு எழும்
நினைப்பே உற்சாக மூட்டுவதாய் இருக்கும். ஆனால் இப்போது, வகுப்பில் சேரப்போகும் முதல் நாளே இறுக்கமான உடைகள் கால் விளிம்பில் அச்சாய் பதிவும் சாக்ஸ்குகள் டை புத்தப்பை என் அழுத்தப்படும் சுமைகள்.

முதல் நாள் வாகுப்பில் அது போய் அமரும் வரையில் அன்னையின் நிலைமையும் கிட்டத்தட்ட பிள்ளையின் நிலைமையைப் போலத்தான். இப்படிச் சொல்லணும், அப்படி சொல்லணும் என்று முதல் வாகுப்பில் சொல்லும் ஆராயிரம் போதனைகளை வாங்கிக்கொண்டு உள்ளே செல்லும் குழந்தை சரிவர அதை உணர்ந்து கொள்கிறய்தோ என்பை எந்த பெற்றொரும் புரிந்து கொள்வதில்லை, ஒருவித பயத்தோடு உள்ளே செல்லும் பிள்ளைகளுக்கு இனிப்புகளை காட்டி வசப்படுத்துவதைப் போல் பெற்றொர்களுக்கும், பல்வேறு சலுகைகள் உள்ளது, எங்கள் பள்ளியில் பயின்றால் உங்கள் பிள்ளை அப்படியாகும். இப்படியாகும் என்று ஆசை காட்டுகிறார்கள். அதிலும் பிள்ளைகள் ஆங்கிலம் பேசிவிடடால் பெற்றொர்களைப் பிடிக்கவே முடியாது.

விட்டிற்கு வந்து போகும் ஒவ்வொர விருந்தினர்களிடம் அது கற்றுக்கொண்டுள்ள அந்த ஐந்து வாரத்தைகளை பேச சொல்லி உயிரை வாங்குவார்கள். அப்படி பிள்ளைகள் முரண்ட பிடித்தால் அவர்களுக்கு ஈகோ, பிரச்சனை ஆகிவிடும். இதில் வந்தவர்களும், பரவாயில்லை சின்னப்பையந்தானே மறந்திருப்பான் என்று எடுத்துக்கொடக்க பெற்றவர்களுக்கோ கோபம் பொத்துகொண்டு வரும். ஒன்று அப்போதைக்கு தன் மானத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று சில இனிப்புகளை பிள்ளைகளுக்கு வழங்குவார்கள்.
இப்படி பலதும் நாம் அவர்களுக்கு சொல்லித் தரவதுதான் அவர்கள் கண்ணாடிகள் போன்றவர்கள். நம்மையே பிரதிபலிப்பார்கள்.

ஒரு பள்ளி ஆண்ட விழாவிற்கு சிறப்புரை ஆற்றிட சென்றிருந்தேன். அன்றைய நிகழ்ச்சிகளை எல்லாம் தொகுத்து வழங்கியவர் ஒரு ஆசிரியர். பெரிய, சிரிய வகுப்புகள் என கலந்து கலந்து நடனமாடிக்கொண்டும், நாடகம் போட்டபடியும் இருந்தார்கள். அப்போது யூ.கே.ஜி மாணவர்களுக்கான நேரம். அழகான உடைகள் அலங்காரம் என பட்டுப்பூச்சிகளைப் போல பிள்ளைகள் அழகாக ஏறிவிட்டப்படியே பிள்ளைகள் வந்திருந்த கூட்டத்தைப் பார்த்ததும் மிரண்டே போய் விட்டனர். பாதிப்பேர் ஆடவே இல்லை
இதையெல்லாம் மீறி ஒரு பிள்ளை மேடையிலேயே அழுதுவிட்டது. என்னம்மா நல்லா ஆடுகிற பயமில்லாத பிள்ளைகளை மேடை ஏற்றக் கூடாதா என்று கேட்டது அந்த ஆசிரியருக்கு கோபம். எத்தனை முறை சொல்லிக் கொடுப்பது இதுங்களால் நான் திட்டுவாங்க வேண்டியுள்ளது என்றார்.

நான் ஒரே வார்த்தையில் சொன்னேன். அவர்கள் மேடையில் ஒழுங்காக ஆடியிருந்தால் கூட நீங்கள் கவனிக்கப்பட்டு இருக்க மாட்டீர்கள். தலைமையாசிரிரும் உங்களை அழைத்துக் கேட்டிருக்க மாட்டார்.ந நீங்கள் பட்ட சிரமங்களும் இப்போது அவருக்குப் புரிந்திருக்கும் அதே போல், மாலை 6 மணிக்கு நடை பெறும் நிகழ்விற்கு 5 மணிக்கே மேக்கப் போட்டு அமர்நதிருந்த அந்தப் பிள்ளைகளின் கஷ்டமும் புரிந்திருக்கும் அந்த பிள்ளைகள் நடனத்தில் தவறே செய்திருந்தாலும் அந்த தவறு கூடரசனையாகவே இருந்தது என்று சொல்லிவிட்டு வந்தேன்.

சின்ன வயசிலேயே இந்த பிள்ளைக்கு எத்தனை திறமை என்று பிறர் சொல்லும் ஒற்றை வரி சொல்லுக்காக நாம் நம் பிள்ளைகளை எத்தனை வதைக்கிறேன் என் உறவுக்காரப் பெண்மணி ஒருவர், 6 வயதில் ஒரு மகன் விடுமுறைக்கு எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார். அவன் வயதில் துறுதுறுவென்று இருக்க வேண்டியவன் மிகவும் சோர்ந்து போய் இறுக்கமாய் காணப்பட்டான். ஆனால் அவனின் அம்மா அவனிடம் கேட்ட சில பொது அறிவுக் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லியபடி வந்தான். மகனின் பதிலில் பெருமிதம் கொண்ட அம்மா வரிசையை மாற்றி வேறு கேள்வியை கேட்டிடபையனின் பதில் தவறாகப் போய்விட்டது. இதற்கு இது பதில் இல்லையடா என்று அன்னை குரல் உயர்த்தவும், மகனோ நான் சரியாகத்தான் பதில் சொன்னேன் நீதாம்மா தப்பா வரிசை மாற்றிக் கேள்வி கேட்டுட்டே என்று சொன்னானே பார்க்கலாம்.

இப்படி குழந்தைகளை சொல்வதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளாக மாற்றி வைப்பதால் தான் பள்ளியிறுதியாண்டு வரும் போது கூட தன்னால் என்ன படிப்பை படிக்க முடியும் என்றும் தன் கெப்பாசிட்டி என்ன என்றும் உணராமல் போய்விடுகிறார்கள். வேதனையான விஷயம் என்னவெனில் கல்லூரி,பள்ளி,வங்கி முதலிய விண்ணப்பங்களைக் கூட அவர்களுக்கு பூர்த்தி செய்யத் தெரியவில்லை.அதிலும்,அந்த படிவத்தை பூர்த்தியாக முயற்சிப்பதும் இல்லை, இதற்கு காரணம் என்ன ? மனப்பாடம் செய்து படிப்பதுடனே என்று படிப்பது. இப்பது குருட்டு மனப்பாடம் செய்வதாலும், பெற்றோரின் திணிப்புகளுக்கு ஆளாவதாலும் தான் பிள்ளைகள் தங்கள் சுயத்தை இழக்கிறார்கள்.

பெரும்பாலான பெற்றோறர்கள் இப்போது வேலைக்கு செல்வதாகவே உள்ளனர். இருவருக்குமே அவரவர் துறை சார்ந்த மனச்சோர்வு இருக்கும். இயந்திரத்தனமான வாழ்க்கை என்பது புரியும்.அப்படியிருக்க ஒருவருக்கொருவர் தங்களின் தேவைகளையோ,கவலைகளையோ பரிமாறிக் கொள்ளக் கூட முன்வருவதில்லை.அதிலும் இந்த நடுத்தர வீட்டு குழந்தைகளின் நிலை இன்னமும் மோசம்.

ஊர் மெச்ச பெரிய பள்ளியில் சேர்து விட்டு பிள்ளைக்கு என்று ஓவர்டைம் செய்து பொருளிட்டுவார்கள் பெற்றோறர்கள் ஆனால் பிள்ளைகளின் கருத்துக்களை கேட்க அவர்களுக்கு நேரம் இருக்காது.

சின்னக் குழந்தை அர்த்தம் இல்லாமல் பேசும்.அப்படியே எல்லாவற்றையும் மீறி பிள்ளைகள் பேச வந்தால்,ஒன்று டி,வியை ஆன் செய்து, கார்ட்டுன் முன்னாடி விடுவத அல்லது ஏதாவது கேம்ஸ் விளையாடச் செய்துவிவது. என்னைத் தொந்தரவு செய்யாதே உனக்குத்தான் வாங்கி தந்து விட்டேனே போய் படி, அல்லது விளையாடு இதுதான் நம்மில் பலர் அதிகமாய் உபயோகிக்கும் வார்த்தைகளாக இருக்கும். அப்போதைக்கு நம் அதட்டலிலோ, கொஞ்சலிலோ அவர்கள் சமாதானம் அடைந்தாலும், மனதிற்குள் அம்மாவிடம் சொல்ல வேண்டும் என்ற அந்த நினைப்பு மறந்து போகும் நாளடைவில் ஏன் வேண்டும் என்ற என்ணம் தலைதூக்கும், இப்படிதான் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு விலகி, தனக்கென்று ஒரு உலகை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

அப்படிபட்ட மாயையான ஒரு உலகை இன்றைய வியாபார நிறூவனங்கள் அழகாக அவர்களுக்கு ஏற்படுத்தித்தருகின்றன. அவர்களுக்கென்று நிறைய சவால்கள் இருக்கிறது. நமக்கு அன்றைய கால கட்டத்தில் மிஞ்சிபோனால் தூர்தர்ஷன் சானல் மட்டும் தான் வரும்.அதில் வாரம் ஒரு படம் வெள்ளிக்கிழமையானால் பாடல் ஒளிபரப்பு என எப்போதடா நிகழ்வு வரும் என்று ஏங்கி எதிர்பார்த்து இருப்போம்.ஆனால் இப்போதெல்லாம் அப்படியா இருக்கிறது.பொழுது போக்க கார்ட்டூன்,வீடியோ கேம்ஸ்,இன்டர்நெட்,செல்போன் என எதைனேயா தடங்கல்கள்.இவை அனைத்தையும் கடந்த பிறகுதான் அவன் முன்னுக்கு வர முயல வேண்டும்.சிலர் பாதி கிணைற கடந்து விடுகிறார்கள்.பலரால் அதிலேயே சிக்கி தன் எதிர்காலத்தையே மறந்து விடுகிறார்கள்.

இதற்கு சரியான வழிநடத்துதல் அவசியம் தேவை, கல்வி வியாபாரமாகிவிட்ட சூழல் இங்கு இருக்கிறது. ஒரு பல்கலைகாக கவுன்ஸிலிங் அதற்கு சென்றிருந்தோம். அதற்கு அரைகிலோ மீட்டர் தூரத்தில் இருந்தே, எங்கள் கல்லூரியில் கேளுங்கள், என்று பிட்நோட்டீஸ் விநியோகம் செய்கிறார்கள்.துணிக்கடைகள், அதிகம் நிறைந்த பகுதிகளில் தங்கள், கடைகளில் இன்னென்ன பொருட்கள், விக்கிறது வாருங்கள் என்று வாடிக்கையாளரை அழைப்பார்கள். வேண்டாமென தலையசைத்தாலும் பின்னாலேயே பேசியபடி வருவார்கள்.அப்படியே கவுன்ஸிலிங்கில் வரும் ஒவ்வொரு பெற்றோரிடமும் மாணவரிடமும் எங்கள் கல்லூரியில் சலுகை கட்டணம் உண்டு. உள்ளே எந்த காலேஜ் என்று கேட்டால் எங்கள், காலேஜ் பெயர் சொலுங்கள். ஒரு செமஸ்டர் பீஸ் இல்லாமலே போகும் படி செய்கிறோம் என்று சொல்லி உள்ளே போவதற்கு முன்னமே இவர்கள் கவுன்சிலிங் தந்து விடுவார்கள்.

எங்கிலும் வியாபாரம்தான் முக்கியமாகப் போய்விட்டது. 3வயதுக் குழந்தையைப் பள்ளிக்குச் சேர்க்க தந்தைப்படும் பாடுகளை ராதாமோகன் இயக்கத்தில் வந்த அபியும் நானும் படத்தில் அழகாக நடித்திருப்பார் பிரகாஷ்ராஜ்.ஸ்விம்மிங் ஸ்கேட்டிங் டான்ஸ் என்று இதற்கெல்லாம் கூட இவ்வளவு தொகை என்று பிரின்ஸிபல் கூறும்போது,அவ இப்பத்தான் நடக்கவே ஆரம்பித்திருக்கிறாள் என்று தான் ஏமாற்றப்படுகிறோம் என்ற உண்மையை விழுங்கிக்கொண்டு பணம் கட்டுவார். இப்படித்தான் இன்றைய கல்வி முறைகள் இருக்கிறது.அதே போல் அவை எத்தனை சுமையாக உள்ளது என்பதையும் ஒரு பொருப்புள்ள தகப்பான காட்டியிருப்பார்,

அதில் ஒரு விஷயத்தினையும் நாம் யோசிக்க வேண்டும் ஆசிரியர் தொழிலையே கண்ணியத்தோடு செய்து வந்த கலம் போய் அதில் நடக்கும் தவறுகளை நாம் கண்கூடாக காண்கிறோம்.நான்படித்த வரையில் சரிவர படிக்காத பிள்ளைகளுக்கு அளிக்கும் தண்டனை பெரிய சிக்கலாய்க் கண்முன் தோன்றியது. அதிலும் வீட்டுப்பாடம் செய்யாத பிள்ளையை அடிப்பது,தான் சொன்ன வேலையை செய்யாத மாணவர்களுக்கு கடும் தண்டனை அளிப்பது, பெண் பிள்ளைகளிடம் தவறான முறையில் நடக்கும் ஆசிரியர்கள் என் நாம் படித்த விஷயங்கள் அநேகம்தான்.ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் அவளின் தாய்தான். அவர்கள், நன்மை ஒவ்வொர முறையிலும் கூர்ந்து கவனிகிறார்கள் என்பதை நாம் கண்கூடாக உணரலாம். நம் ஒவ்வொரு செயலையும் அவர்க்ள தன் மனதில் பதிய வைத்தக் கொள்கிறார்கள்.

ஒரு குழந்தை மெல்ல சுவற்றைப் பிடித்து அடியெடுத்து நடக்கிறது. அப்போது அது தெரியாமல்
கீழே விழுகிறது என்று வைத்துக்கொள்வோம். சுவற்றில் மோதி விழுந்து அழும் அக்குழந்தையை சமாதானப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு நாம் செய்யும் செயல் என்னவாக இருக்கும் அந்த குழந்தையை அடித்ததாக கூறி சுவரில் இரண்டு தட்டு தட்டுவோம். உடேன அந்த குழந்தையோ தன்னை அடித்தவர்களை அம்மா அடித்துவிட்டார். என்று அழுகையைத் தொலைத்துச் சிரிக்கும்,ஆனால்,மனதளவில் அக்குழந்தையின் மனதில் நம்மை அடித்தால் நாம் திருப்பி அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நாமே உருவாக்கி வருகிறோம். இதுபோல் பாதுகாக்கிறேன் என்ற பெயரில் அளவுக்கதிகமாக கட்டுப்படுத்துவதும் தவறுதான் சுதந்திரமாக விடுகிறேன் என்று கண்மூடித்தனமாக நம்புவதும் தவறுதான்.

கண்டிப்பு என்பது எந்நேரமும் பின்தொடர்ந்து கண்காணிப்பது அல்ல, நமக்கு எது தேவை என்ற புரிதலை பள்ளைகளுக்கு ஏற்படுத்துவது. ஒரு 10வயது சிறுவனையோ சிறுமியையோ அருகில் உள்ள கடைக்கு அழைத்துச் செல்லுங்கள் புத்தகம், நோட்டு பெனா ஒருபுறம், பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள் ஒருபுறம் எனப் பிரித்து வைத்து உனக்கு எது வேண்டும் என்று கேளுங்கள்,முதலில் அவர்களின் பார்வை பொம்மைகளிடமும், விளையாட்டு பொருட்களிடமும் தான் போகும் ஆனால்,ஒரு 5 நிமிடம் செலவழித்து இரண்டு பக்கமும் உள்ள பொருட்களால் அவனுக்கு அல்லது அவளுக்கு ஏற்படும் பலன் என்ன ? தேவை என்ன என்பதை உணர்த்துங்கள் அப்போதுதான் அவர்கள் யோசிக்கும் திறன் வளரும். இதேபோல ஒரு சோதனையை நான் என் பிள்ளைகளிடம் 6வயதி நடத்தினேன். முடிவில் அவர்கள் தேர்ந்தெடுத்தது என்னவோ புத்தகங்களைதான்.

நமது பொருளாதார நிலையை,செலவு செய்யும் பாங்கை பிள்ளைகளுக்கு சொல்லித் தரவேண்டும். வீட்டு செலவுக்கு பட்ஜெட் போடும் போதும்,குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கச் செல்லும் போதும் பிள்ளைகளை அருகில் வைத்து கொள்ளவேண்டும் எவ்வளவு செலவாகிறது. எப்படி இது அத்தியாவசியமான செலவு அவசியமில்லாத செலவு என்று நாம் பிரிக்கிறோம் என்று சொல்லிக்கொடுக்கவேண்டும். தன் தந்தை அந்த பொருளை வாங்க எத்தனை கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறார் இவையெல்லாம் உணர்த்தப்படும் குழந்தைகள், தன் பொருப்புணர்ந்து படிப்பார்கள். குடும்பத்தின் மீது ஒரு ஒட்டுதல் வரும். அதை விடுத்து குடும்பக் கஷ்ட்ம் குழந்தைக்கு தெரியாமல் வளர்ந்து அவன் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்துக் கொண்டே இருந்தால் நீங்கள் வாங்கித் தரும் பொருள் மேல் உள்ள ஒட்டுதல் சில நாளிலோ சில வருடங்களிலோ முடிவைடவது போல் உங்கள் மேல் உள்ள அன்பும் அவசியமற்றதாய் போய்விடும், அவன் கண்ணுக்குI தான் விரும்பும் எதையும் வாங்கித்தரும் ஒரு ATM மிஷினாகத்தான் நீங்கள், கண்களுக்குத் தெரிவீர்கள்.

இன்னும் குழந்தைகளுக்குள் எந்த அளவு சமமான பாசத்தை வெளிப்படுத்திடவேண்டும் என்றும் அதனால்,ஏற்படும் நலன்களையும்,விளைவுகளையும் அடுத்த தொடரில் பார்ககலாம்.

619 total views, 1 views today

Share Button