அக்னிப் பறவைகள் : அத்தியாயம்-4

-லதா சரவணன்

pic 1

பெண்ணே…… பெண்ணே

சில நாட்களாக என் மனதை உறுத்திவரும் விஷயங்களின் குமுறல்கள்தான் இந்தத் தொடர்…. எத்தனையோ நிகழ்வுகள் நம்மைச்சுற்றி ஊடகம், பத்திரிக்கைகள் வாயிலாக வலம் வருகிறது, ஒவ்வொரு பக்கமும் பெண்கள் படும் வேதனைகளையும் அவமானங்களையும் தாங்கியபடி, காற்றைப்போல் இலக்கில்லாமல் குற்றங்கள் பெண்ணினத்தை சீரழிக்கிறது.இன்றைய பெண்களின் நிலையென்ன ஆதிகாலத்தில் இருந்தே எத்தனை வேதனைகளை தாங்கிக்கொண்டு வந்திருக்கிறாள் பெண்களின் பாதுகாப்பு இப்போது குழிதள்ளி புதைக்கப்பட்டு இருக்கிறது என்பதே உண்மை. எல்லாக் காலத்திலும் பெண்கள் மலிவுப் பொருளாகத்தான் சிரடிக்கப்பட்டு இருக்கிறாள். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே, இவைபோன்ற பல நூறு பழமொழிகள் பெண்ணினத்தை அடக்கிவிட்டேன் பார் என்று சவால் விட்டுக்கொண்டிருகிறது.நிகழ்வுகள் மட்டுமல்ல கதைகள் சித்திரங்களில் கூட பெண்ணின் நிலை மோசம்தான். அடுத்தவனின் மனைவி என்று எண்ணாமல் கற்புகரசியான சீதாவை கவர முயற்சித்த இராவணன். எத்தனையோ இன்னல்களை சுமந்த போதும், தன் கணவனை கண்டுவிட்டோம் என்று சீதாதேவி அகமகிழ்ந்து இருக்கும்போது நீ சுத்தமானவள் என்பதை நிரூபிக்க தீக்குளிக்க வேண்டும் என்று இரையாக்கிய கணவன் கைகால் விளங்காதபோது, தாசிவீட்டிற்கு கணவனை கூடையில் சுமந்து சென்ற மனைவி, கணவன் தன்னை ஏமாற்றி இன்னொரு பெண்ணிடம் இருந்தாலும், அவனுக்காக ஒரு நகரத்தையே தீக்கிரையாக்கிய கற்புக்கரசி கண்ணகி, கட்டின மனைவியை வைத்து சூதாடிய கணவன் நிறைந்த சபையில் துகிலிரியப்பட்ட மனைவியை வேடிக்கைப்பார்த்த தர்மர், சுகமும் துக்கமும் உன்னோடுதான் என்று அக்னிவலம் வந்து கட்டின மனைவியை நடுக்காட்டில் தவிக்கவிட்டு சென்ற நளன், எந்த காலத்திலும் பெண்ணின் உணர்வுக்கு யாரும் மதிப்பளிக்கவில்லை, அவள் வெறும் பொம்மையாகதான் வாழ்ந்திருக்கிறாள். மாபெரும் இதிகாசங்கள் பெண்களால்தான் தொடகியும் இருக்கிறது முற்று பெற்றும் இருக்கிறது என்பது எத்தனை உண்மை,

ஒருபெண் பிற்ந்ததில் இருந்து தந்தையை, வளரும் போது சகோதரனை, மணம் முடித்த பிறகு கணவனைஅந்திமக் காலத்தில் பிள்ளையை என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆணை சார்ந்தே வாழ்ந்து வருகிறாள் என்று சமூகம் பதிய வைத்து இருக்கிறது. ஆனால் இந்த சந்தர்பங்களில் எல்லாம் பெண்தான் ஆணுக்கு துணையாக இருந்திருக்கிறாள் என்பதே நிஜம். தாயாய், தாரமாய், தொழியாய், சகோதரியாய், மகளாய், என பெண்ணின் பங்களிப்பை அதிகம் பெறுகிறான் ஆண். அவளின் உழைபினைச் சுரண்டுகிறான்.
அதையெல்லாம் நான் அவளுக்கு பாதுகாப்பு தருகிறேன் என்றபோர்வையினுள் ஒளித்துகொண்டு சுகமாய் வாழ்கிறான். ஆனால் பெண் மெழுகு வர்த்தியாய் உருகுகிறாள். என்னாதான் நாங்கள் பெண்களுக்கு சுதந்திரம் தந்துவிட்டோம் இன்று பெண்கள் கால்பதிக்காத துறைகளே இல்லை என்றெல்லாம் மார்தட்டிக்கொண்டாலும், இன்னும் சமையல் அறை இருட்டுக்குள் வாழும் பெண்ணின் நிலையை யாரும் இல்லையென்று மறுக்க முடியாது. நேற்றைக்கு கூட ஒரு செய்தி, ஆணின் துணையில்லை என்று இருதய நோய் முற்றிய ஒரு பெண்ணை காப்பாற்றிட மறுத்திருகிறது ஒரு மருத்துவமனை, இவை அன்னிய தேசத்து செய்திதான் என்றாலும், இன்றளவில் நமக்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு நாட்டிற்குள் பிரச்சனை போர் என்றால் அந்நாட்டின் பெண்களின் நிலை அதோகதிதான், பெண் உடலளவில் சக்தி குறைந்தவள் என்றாலும் மனதளவில் சக்தி வாய்ந்தவள், இதோ நம் அண்டைநாட்டு விஷயங்களையே எடுத்துக்கொள்வோமே, இலங்கை இராணுவத்தினர் எத்தனை மோசமாய் பெண்களின் உடலைச் சீரழித்திருக்கிறார்கள். இறந்த பெண்ணின் மார்ப்பகத்தை சுவைத்த பச்சிளம் குழந்தை, இரத்த வெள்ளத்தில் உடையற்ற பெண்ணின் சடலம், முகம் சிதைந்து உடல் உறுப்புகள் சிதைந்த அவலம், வெறி நாய்களுக்கு மத்தியில் சிக்கிகொண்ட பெண்களின் நிலையை மறக்க முடியுமா? எத்தனை இன்னல்களை கடந்து வந்திருக்கிறாள் அவள். சதியேற்றம் பற்றி அறிந்திருப்போம், கணவன் இறந்துவிட்டால் மனைவி தன் பிள்ளைகளையோ உறவுகளையோ பற்றி நினைக்காமல் உடனே அவனுடன் உடன்கட்டை ஏறி தீநாக்குகளுக்கு தன்னை இரையாக்கிக் கொள்ள வேண்டும் என்பது எத்தனை அபத்தான கொடூரமான விஷயம், அதையும் தாண்டி வந்தனர் நம் பெண்கள். சடங்கு சம்பிரதாயம் என்று பெண் குழந்தைக்கு பொட்டுகட்டி கோவிலுக்கு நேர்ந்து புதிதாக தேவதாசி என்னும் முறையும், அப்பெண்கள் இழி குலந்தவர் என்று வேத்தைப்படுத்தியும் வைத்திருத்தார்.
பண்டையகாலந்தோட்டே கோவில் குருக்கள், அரசர்கள், செல்வந்தர்கள் கலையின் பேரால் போகத்தின் பேரால், சமூகத்தில் தேவரடியாளாக பெண்களை உபயோகித்து வந்தனர். மூவலூர் இராமரிந்தம் அம்மையார் அன்றைய காலங்களில் தேவதாசி முறையை எதிர்த்துப் போராடி வந்தனர்.

இவற்றையெல்லாம் கடந்து குழந்தைத் திருமணங்கள் சின்னஞ்சிறு பெண்பிஞ்சுகளை பால்யவிவாகம் செய்து அது வளரும் முன்னரே கணவரை இழந்து கைம்பெண்ணாக கூந்தல் மழித்து வாழ்ந்த காலங்கள் எல்லாம் இன்று நம் ஏட்டில் படித்தாலும் அந்த நேர கொடுமைகளை அதை அனுபவித்த பெண்களை நாம் நினைவில் கூறவேண்டும்.பெண்சிசு கொலையாய் மாறியது அடுத்த துயரம். அன்னையின் மார்ப்புத்தட்டைப் பாலை சுவைக்கும் முன்னரே கள்ளித்தட்டைப் பாலைச் சுவைத்தது அந்தப் பிஞ்சு அதரங்கள் பலருடையப்பசியைப் போக்கி உயிரைக்காக்கும் நெல்மணி கூட பெண்குழந்தையின் சிறு தொண்டைக்கு விஷமானது தான் வேதனையான விஷயம். பெண் குழந்தை பிறந்துவிட்டால் என்ன பாவம் செய்தாயோ பெண்ணாக பிறந்திருக்கிறது, என்று ஊராரும், வரதட்சணை என்ற அரக்கனுக்குப் பயந்து எத்தனையோ பிஞ்சுகள் கருகின. அதிலும் வளர்ந்து மணம் வீசிய பூக்கள் புக்ககம் போய் கருகின. அடுப்புதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று அவளின் படிப்பிலும் மண் விழுந்தது, இத்தனை இன்னல்களையும் கடந்து இன்று எல்லாத்துறையிலும் வெற்றி வாகை சூடிக்கொண்டு இருக்கிறார்கள் பெண்கள்.

இந்தியாவின் விண்வெளி வீராங்கனையாய் மாறி தன் உயிரை தந்த கல்பனா சாவ்லாவா, ஏவுகணை 5 வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய டெசி தாமஸ் ஆகட்டும். பதுக்கல் பொருட்களை கடத்தியவர்களை 15 கிலோ மீட்டர் துரத்தி அதை கைப்பற்றிய பெண் அதிகாரி சிகிபிரமிளா என பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லையெனால், ஆணைவிடவும் இரட்டைக் குதிரையாய் வீடு குழந்தைகள் அலுவலகம் தன் தனித் திறமைகள் என நான்கு சாரட் பூட்டிய வண்டியில் பயணிக்கிறாள் பெண். இத்தகைய அரசு வளர்ச்சியினை சிதைக்கும் பொருட்டுதான் இன்று பாலியல் வன்முறைகள் பெருகிவருகின்றன. ஒருவரின் வளர்ச்சியின் மீது போறாமை கொண்டவர்கள் முதலில் அவர்களை வீழ்த்துவது சொற்களால்தான். மனதள்வில் அவர்களின் ஒழுக்கக் கோட்பாடுகளை விமர்ச்சிப்பதால் பெண்கள் அடங்கிப்போய் விடுவார்கள் என்று தப்புக் கணக்கு போட்டார்கள் உயர் பதவியில் உள்ள பெண்கள் மீது தவறான சொற்களை வீசினாரகள். அதேபோல், ரியாலிட்டி ஷோ நடத்திவரும் ஒரு பெண் இயக்குநரின் வளர்ச்சிப் பிடிக்காமல் இழீவுச்சொற்க்களை வீசினார்கள். அதிலிருந்து அவர் மீண்டு வந்ததோடு பெண்களுக்கு அந்த மனோதைரியம் வேண்டும் என்று கொடிப்பிடித்தார். படிப்பும் மனதைரியமுமே வழினடத்திட உதவும் என்பதை பெண்கள் உணரவேண்டும்.

பெண்களை நீராகப் புகழ்ந்து வளர்ச்சிக்கு அணைபோட்டோம். நிலமாக எண்ணி உணர்வுகளை மிதித்து மகிழ்ந்தோம். தெய்வமென உருவப்படுத்தி கல்லாக்கினோம். இபோதைய பெண்கள் சித்திரப்பாவைகள் அல்ல கண்ணாடிகள், அவரளில் உங்களை பிரதிபலிக்க வேண்டும் என்று வற்புறுத்திகிறோம். பெண்ணின் சிந்தனை ஓட்டங்கள் ஏடு கட்டிய பாலை போல் திரண்டுபோகிறது. பாசிபடிந்த குளத்தின் மலரைப் போல புதையுண்டு போகிறது. கொருவறை முதை கல்லரை வரை நம்மை கொண்டு சேர்க்கும் பெண்களை அன்னையாக பாவிக்க வேண்டாமா? பெயரளவில் மட்டும் பெருமை சேர்ப்பது நியாயமா? பெண்கள் எத்தனைதான் சாதித்து இருந்தாலும் குடும்ப வாழ்வில் அநேக ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கின்றனர். இதற்க்கு நம் சமூக அமைப்பும் ஒரு காரம் பெண் பிள்ளைகள் என்றதும் கள்ளிப்பால் கொடுத்து கொன்றதுதானே அச்சமூம், தற்போது ஒரு பாடல் கேட்டேன் அன்னையின் வயற்றில் இருந்து கலையாமல் பிறந்தாயே அதுவே வெற்றிதானடா என்று? எத்தனை அருமையான வரிகள். ஆனால் பிறப்பில் ஒரு வேதனையென்றால், அவள் வள்ர்ப்பில் எனக்கு ஆண் குழந்தை பிறந்திருகிறது என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்பவன் பெண் குழந்தை பிறந்திதுகிறது என்று தலை குனிந்து சொல்வான், ஆண் என்ற வார்த்தையின் தோனியே அகங்காரமாய் இருக்க, பெண் என்ற வார்த்தையின் வீரியத்தை குறைத்து இகழ்கிறார்கள்.அதையும் மீறி பெண் குழந்தைதான் வேண்டும் என்று முதுகெலும்புள்ள ஒரு மனிதன் கூறும்போதுதே பொம்பிளை பிள்ளை பெற்று வைச்சிருக்க உன் எதிர்காலத்திற்க்கு என்ன இருக்கு காலம் போன கடைசியிலே பெண் பிள்ளைக்கே எல்லாத்தையும் செய்திட்டு நாம நட்டாத்திலேதான் நிக்கணும் அவனையும் குறைபட்டுக்கொள்ளும் சமூகம்.

பெண் வளருகிறாள் கூடேவ அவளின் சிரிப்பு அழுகை வலி இதற்கெல்லாம் எல்லைகோடுகள் வளர்கிறது. குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும், ஆண் பிள்ளைக்கு அடிபட்டுவிட்டாள்
அவன் ஆம்பிளைபிள்ளை துறுதுறுன்னு இருக்கிறான்.அதுதான் வீர்ம் என்றெல்லாம் கூல் பேசுவார்கள்.அதே பெண்பிள்ளை சிறுகாயம் அடைந்தாலும், இதுயென்ன ஆம்பிளை மாதிரி அடிப்பட்டு வந்து நிற்கிறேயே,இப்படி அடிபட்டு கையைகாலை உடைச்சிட்டு வந்தா யாரு கல்யாணம் பண்ணிக்குவாங்க, இப்படி அழுகைக்கும்,வலிக்குமே இத்தனை பேச்சினில் சிரிப்பிற்கு கேட்கவா வேண்டும். ஊரே கொள்ளை போகிறாமாதிரி, அதென்னடி அத்தனை சிரிப்பு இப்படி வாய்கொள்ளாமல் சிரிச்சா நாளைக்குப் போற இடத்தில எப்படி பிள்ளையை வளர்திருக்காபாருன்னு ஏகத்துக்கும் வசவுகள், ஒரே இடத்தில் சிரிப்புக்கும், அழுகைக்கும் சிந்தனைகளுக்கும் தடைபோடப்பட்டே பெண் வளர்க்கிறாள். அதே வீட்டில் அடக்குமுறைய பிறர் மீது செலுத்திய ஆண் வளர்வான். தன் இயல்பான ஆசைகளைக் கூட தனக்குள்ளேயே
விழுங்கிக்கொள்கிறாள் பெண், இதனைவிடவும் கொடுமை நாங்கள் ஒருமுறை திருவிழா நேரம்
சென்றபோது, எங்கள் உறவுப்பெண்ணிற்கு உடல் நலமில்லாமல் போனபோது., அவள் அழுதுகொண்டே தெருவில் நடந்து செல்கிறாள். அருகில் வந்த அவளின் அம்மா வயசுப்பொண்ணு இப்படி ரோட்லே அழுதுகிட்டே போனா பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க என்கிறார். எனக்கு சுருக்கென்று கோபம்தான் வந்தது. ஜீர்வேகத்தில் அந்தப்பெண் உடனடி முதலுதவியும் கிடைக்காமல் கஷ்டப்படுகிறாள். தன் வேதனைகளைக் கூட கண்ணீரால் வெளிப்படுத்திட இயலாமல் தடை சொல்வதாய் யாருக்கு என்ன லாபம்?

உனக்கு கருத்து சொல்லும் உரிமையில்லை, உணர்வுகளை வெளிப்படுத்திட உரிமையில்லை,என்று தன்னை நசுக்கியே வளர்க்கின்ற் ஒரு பெண்ணின் நிலைமையை யோசித்து பார்க்க வேண்டும் நன்கு படிக்கும் பெண்ணை மேற்படிப்பிற்கு அனுப்பிட எத்தனைதடைகள்,அதிகமாய் படிக்கவைத்தால் பெண்கள் கட்டுபடமாட்டார்கள்,சுயமாய் சிந்திக்கத் துவங்கிவிடுவார்கள் இல்லையா?அதுவும் இத்தனைப் படிக்க வைச்சிட்ட்டா கல்யாந்த்திற்கு மாப்பிள்ளை பார்க்கும் போது சிக்கல் வரும்,அப்படியே கம்மியாகப்படித்த ஆணுக்கு் திருமணம் செய்து வைத்தால் கருத்து வேறுபாடு போன்ற சிக்கல்கள் வந்துவிடும் என்று பெண்ணின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் இணைத்து அதில் ஆதாயம் தேடும் நிலையில் தான் பெண் இருக்கிறாள். அளவுகோலைத் தாக்கும் அலமாரிகளாய் மாறிப்போகிறாள் பெண். அடிப்படை இன்பமாகட்டும் தன் ஆன்மை நிரூபிக்கப்பதாகட்டும் கணவன் மனைவிற்குள் சண்டையென்று வைத்துகொண்டாலும்,அங்கே,ஆண் என்னும் நினைப்பை அவனுக்கு விதைப்பேத பெண்தான். தன்னை உணர்திக் கொள்வதற்கும் பெண்ணின் துணை அவனிற்கு தேவைப்படுகிறது.இதில் அன்பான பெண், அமைதியாயன குணமுடைய பெண் வேண்டும் என்று கேட்பதில்லை,சிவப்பான அழகான பெண் இந்த ஒரு விஷயத்தைதான் முன்னோடியாக வைத்துகொண்டு பெண் பார்க்கிறார்கள்.இது ஒப்புதல் ஆனபிறகுதான் பேரம் துவங்குகிறது.என் உறவினர் ஒருவருக்கு தீவிரமாக பெண்பார்த்து வந்தார்கள். 30வயதைக் கடந்துவிட்ட கருத்த நிறமுடைய அவர் தனக்கு பார்க்கும் ஒவ்வொரு பெண்களையும் அல்ப காரணங்களை சொல்லி தட்டிக்கழித்துக்கொண்டே வந்தார்.எதிலும் திருப்தியடையாத அவர் தனக்கு வாழ்வில் கிடைத்த அரிய பொக்கிஷமான மனைவியை தொலைத்துவிட்டு இப்போது நிற்கிறார். ஒருபெண்திருமணத்திற்கு முன்புதொழீலிலோ,படிப்பிலோ சாதித்துவிட்டாள் என்றாலும் மணமாகிப்போன இடத்தில் சராசரிக்கும் கீழே அடிமுட்டாளாகத்தான் பார்க்கப் படுகிறாள். அந்த வீட்டைப் பொறுத்தவரையில் அவள் ஒரு புதுவரவு,அங்கே அவளுக்கு எந்த உரிமையும்,ஒரு காட்சிப்பொருளாகிப்போகும்.அந்தப்பெண்ணின் நிலை பரிதாபம்தான். எத்தனையோ கனவுகளோடு புகுந்த வீட்டில்காலடி எடுத்து வைத்து கணவன் உறவுகளைத் தன் உறவுகளாக ஏற்க வேண்டும் என்றெல்லாம் எண்ணித்தாண் அவள் வருகிறாள்.ஆனால் அவள் நிலைமை தலைகீழாகத் தொங்கும் வவ்வாலைப் போலத்தான் இருக்கிறது.

நம் சமூகத்திருமணங்கிளல் பணமும் நகையும்தான் மதிக்கப்படுகின்றன.அப்படி நிர்பந்தித்த உறவுகளை பெண் எப்படி மனமுவந்து ஏற்க முடியும் 20வருடங்கள் வளர்த்த பெற்றோரிடம் அவளுக்கு உரிமையோ பாசேமா இருக்கக்கூடாது, ஆனால் அதே அன்பையும் பாசத்தையும் புதிய உறவுகள் மேல் அவள் வைக்கவேண்டும். உண்மையான அன்பு என் குடும்பம் என் கணவன் என்ற எண்ணங்களை வந்த முதல் நாளே மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டும் என்று இவர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்கள். பெண்களுக்கு குடும்ப வாழ்வில் முழுமையான சுதந்திரம் என்றுமே இருப்பதில்லை, அவள் தன் எண்ணங்களையும் சிந்தனைகளையும், கற்பனையிலேயே கழித்துவிடுகிறாள். எத்தனையோ இடர்பாடுகளைதாண்டித்தான பண் வெளியில் வருகிறாள். ஒரு ஆண் வெளியில் கிளம்புகிறான் என்றால் அது விசேஷம் இல்லை, அதே ஒரு பெண் கிளம்புகிறாள் என்றால் அவள் தன் கணவனுக்கு வயதான மாமனார் மாமியாருக்கு, படிக்கும் பிள்ளைகளுக்கு என எல்லாவற்றையும் முறைப்படி செய்தபின்னர்தான் இரண்டு மணிநேரங்கள் ஆனாலும் வெளியே சென்றுவர முடியும்,வெளிஉலகம்,வீடு உறவுகள் என எல்லாவற்றையும் பேலன்ஸ் செய்வதும் உண்டு, சில நேரங்களில் சொதப்பலும் உண்டு.பெண் வளர்கிறால் என்றால் முதலில் கேலி,இகழ்ச்சி இதிலும் அவள் அடங்கவில்லையென்றால், அவளின் ஒழுக்கத்தைக் குறைகூறிப்போவது,மெல்ல மெல்ல ஏறிக்கொண்டிருக்கும் அவளின் வெற்றக்கயிற்றின் நுனி தேடி எங்கே அறுக்கலாம் என்பதுதான் பலரின் எண்ணமாகும். இத்தனையும கடந்து சாதிக்கும் பெண்களின் வளர்ச்சி பாராட்டத்தக்கதுதான்.

1995ல் வியன்னாவில் நடந்த உலக மனித உரிமை மாநாடில் பெண்களின் மீதான உரிமை மீறல் குறித்து விசாரித்து சட்டம் இயற்றப்பட்டது. இந்தியாவில் 2010ல் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களுக்கு தண்டனை அளிப்பதைப் பற்றி அரசாங்கம் எச்சரிக்கை செய்தது, ஆனால் தண்டனைகள் அதிகரிப்பதால் மட்டும் குற்றங்கள் குறைவதில்லையே, தினமும் நாளோடுகளிலும், ஊடகங்களிலும் பெண்களின் நிலை குறித்து எத்தத்தனை செய்திகளை வாசிக்கிறோம். வாழ்வில் உயர்ந்தவர்கள் அனைவருமே பெண்களைப் பற்றிய உயர்ந்த மதிப்பீடுகளைக் கொண்டவர்கள்தான்.என் நண்பர் ஒருவருக்கு பெண்பார்க்கிறார்கள்.அவர் தன்னுடைய பழைய வண்டியை வைத்துக்கொண்டே காலந்தள்ளினார். புதிய வண்டி வாங்குவதற்கு என்ன? இப்போதுதான் நிறைய லோன் தருகிறார்கல் தவணை முறைக் கூட வந்துவிட்டதெ என்றேன். அதற்கு அவர் இப்பொது எனக்கு பெண் பார்த்து முடிவாகிவிட்டது, மாமனார் வீட்டில் வாங்கித்தருவார்கள் என்றார்.

நீ நன்றாக சம்பாதக்கிறய் உனக்குத் தேவையானவற்றை நீ வாங்கிக்கொள்வதை விட்டுவிட்டு யாசகம் கேட்பதுபோல் இதென்ன என்று கேட்டேன்.

நான் அவளை என் வாழ்நாள் முழுவதும் வைத்து சோறு போடப்போகிறேன் அல்லவா, துணிமணி மருத்துவ செலவுகள் என்று எத்தனையோ இருக்கிறதே அதனால்தான் முன்னமே பெற்றுக்கொள்கிறேன் என்று கூறினார்.எனக்கு கோபம் தாங்க முடியவில்லை, நீ உன் மனைவியினைத் துணையாய் தேடினால் வாழ்வில் இன்பம் கிடைக்கும், தவிர்த்து சொத்துக்களைத் தேடித்தருபவளாகவும் பாலியல் பொம்மையாகவும் தேடுகிறாய், இம்மாதிரி ஆண்கள் சிலர் மனைவியை பாரமாய் ஒரு தூசியைப் போல் என்ன காரணம் என்று ஆராய்ந்தபோதுதான் நம் அடிப்படை வளர்ப்பு முறையிலேயே தவறு இருப்பதை அறிய முடிந்தது. நாம் பல வீடுகளில் கண்டிருப்போம். பெண்பிள்ளை உணவருந்தியபின்
அந்த இடத்தை சுத்தம் செய்யவேண்டும்.நீண்ட நேரம் உறங்கிடக்கூடாது.சற்று சத்தமாக சிரிக்கக் கூடாது. தன் கவலைகளை மறக்க அழுகை கூடாது. இந்ததைடகள் எதுவும் இல்லாமல் அதிசயப் பிறவியைப் போல் நடத்தப்படும் ஆண்பிள்ளைக் கண்டிருக்கிறோம். அங்கே தோன்றுகிறது. அந்த தாழ்வு மனப்பான்மை பெண் என்பவள் தன்னால் அடக்கியாளப் பிறந்தவள் என்ற எண்ணம். குழந்தை பருவத்திலேயே அடுத்தவர்கள் என்ன சொல்லுவார்களோ என்று எச்சரித்து அவளின் சுயமரியாதையை நசுக்கிவிடுகிறோம்.அது எந்த நேரத்திலும் வெளிப்பட்டு விடக்கூடாது என்று சமூகம் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறது.

நாற்பது பெண்களைப் பார்த்து வேண்டாம் என்று சொலிட உரிமையிருக்கிறது ஆணுக்கு, ஆனால் இவன் தனக்கு ஏற்றவன்தானா என்று எண்ணம் கூட தோன்றிட உரிமையில்லாமல் பெண் இருந்திருக்கிறாள். ஆனால் இதெல்லாம் சில வருடங்களுக்கு முன்பு, இன்று ஆண்கள்தான் பயப்பட வேண்டியுள்ளது என்று சிலர் விவாதிக்கிறார்கள். ஆனால் அவர்களின்
கண்ணோட்டப் பெண்கள், நன்கு வெளி உலகம் அறிந்தவர்கள், உயர்பதவி வகித்து உயர்மட்ட வாழ்க்கை வாழ்பவர்கள், நம் கூற்று என்னவோ நடுத்தர அதற்கும் அடிமட்ட தளத்தில் உள்ள பெண்களைப் பற்றித்தான். தனக்கு என்ன உரிமையிருக்கிறது. அல்லது தனக்கு என்ன தவறு நடக்கிறது என்று அறியாத பிஞ்சுகளைப் பற்றித்தான். பள்ளியில் மாணவியைக் கற்பழிக்கும் ஆசிரியர், தன் விருப்பத்திற்கு இணங்காத பெண்ணை ஆசீட் வீசிய வாலிபன் பச்சிளம் பிள்ளை
என்று பார்க்காமல் உடலைச் சிதைத்த காமக்கொடூரன் மனைவியின் அந்தரங்கத்தை விற்கும் கணவன் 5வருடங்களாக தந்தையே மகளை சிதைத்த அவலம் இன்று நாம் சந்திக்கும் நிகழ்வுகள் இதுதான் இவர்களின் பார்வைகளுக்கு பெண் உடைகள் நீக்கப்பட்ட பாலியல் பண்டமாக தெரிய எது காரணம்? அதற்குரிய பதிலோடு அடுத்த தொடரில் சந்திப்போம்………………..

783 total views, 1 views today

Share Button