தோழி என்னும் தெய்வம்

-நந்தினி மூர்தி

images-10

எனக்கு என்னோட தெய்வம் என்னோட தோழின்னு தான் சொல்லுவேன். அவள் பெயர் கிருஷ்ணவேணி. மதுரை லேடிடோக் கல்லூரியில் தான் சந்தித்தேன் அவளை ஒரே வகுப்பு,விடுதி.

முதல் சந்திப்பு :

எங்களோட முதல் சந்திப்பு ரெம்ப எதார்த்தமா இருந்துச்சு அட்மிஷன் அன்னைக்கு தான் முதல்ல பாத்தோம் ரெண்டு பேரும் ஒரே கலர் டிரஸ், அவளும் அவள் குடும்பத்தினரும் வந்திருந்தாங்க நானும் என்னோட குடும்பத்தோட வந்திருந்தேன் அப்போ அவள நான் அவளோ கவனிக்கல எங்க அப்பா தான் அவகூட பேசிட்டு இருந்தாங்க அவ தென்காசி பக்கத்துல ஒரு ஊரு பக்கம்ன்னு சொன்னா அப்பாக்கு அந்த ஏரியா ரெம்ப நல்லா தெரியும் அதுனால ஊர் பத்தி பேசிட்டு இருந்தாங்க நான் கண்டுகல.
அப்பாகிட்ட பேசும் பொழுது ரெம்ப பயந்து தான் பேசுவேன், நான் எங்க அப்பாட்ட பேசுறத பாத்து அவளோட அத்தை “பாரு அந்த பொண்ணு எவளோ மரியாதையா பேசுறான்னு சொன்னாங்களாம்”( தட் சட்டைக்காலரை தூக்கிவிட்டு பெருமைப்படுற மொமன்ட் )
அப்பறம் ரெண்டு பேரும் மூஞ்சிக்குநேரா பாத்துட்டோம் ஒரு சின்ன ஸ்மைல் “ஹாய்” அவளோதான்.

ஹாஸ்டல்:

ஒரே ஹாஸ்டல் வேற அட்மிஷன்ல பாத்த அதே பொண்ணுன்னு போய் ஹாய் சொன்னேன் , நானாத்தான் போனேன் , அவளும் ஹாய் சொன்னா. எந்த ரூம்ன்னு கேட்டா அவ ரூம் பக்கத்து ரூம்தான் நான்ன்னு சொன்னேன் காலையில பாத்தோம் சாப்பிட்டு வரும்பொழுது , அவ “கிளாஸ்க்கு போகும் போது என்னையும் கூட்டிட்டுபோங்க”ன்னு சொன்னா, ஆனா நான் க்ளாஸ்க்கு லேட் ஆகிருச்சுன்னு கிளம்பிட்டேன் அவள கூப்பிடல.
அவ செம கோவமாகிட்டா ஆனா ஏதும் சொல்லல. அப்புரம் கொஞ்சம் கொஞ்சமா ஹை, பைன்னு தான் இருந்துச்சு ஆனா என் பக்கத்துல தான் உக்காருவா கிளாஸ்ல நான் காலேஜ் 1st yrல ரெம்ப பயந்த பொண்ணு பள்ளிப்பருவத்துல நடந்த சில கசப்பான அனுபவங்களால தனிமைய ரெம்ப விரும்ப ஆரம்பிச்சேன், சில வலிகள், வேதனைகள் நினைவுல எப்பவுமே அசைபோட்டுட்டே இருக்கும், அதுனால யாரையும் கண்டுக்கிறதில்லை. படிக்கும் பொழுது சேர்ந்து படிப்போம், நிறைய பேச ஆரம்பிச்சேன் அவ கூட அப்போ தான்

கிடச்ச பெஸ்ட் friend :

நிறைய விஷயங்கள் பகிர்ந்துக்க ஆரம்பிச்சோம் 2nd yrல ரெண்டு பேரும் ஒரே ரூம் இன்னும் நல்லா டைம் ஸ்பென்ட் பண்ண ஆரம்பிச்சோம் ஆனா அவளுக்கு மத்த டிபார்ட்மன்ட்ல அவளோட ஸ்கூல்மேட்ஸ் இருந்தாங்க அவங்க கூட தான் சாப்பிட போவா என்கூட அவ வரணும்ன்னு தான் ஆசை படுவேன் ஆனா அது நடந்ததில்லை. என்னை பாக்குறா மாதிரித்தான் அவ உக்காந்து சாப்பிடுவா டைனிங் ஹால்ல, அவளோ தான்.
அவளுக்கும் என்னை பிடிக்குமான்னு தெரிஞ்சுக்க ரெம்ப ஆசைப்பட்டேன், ஆனா என்னால கண்டுபிடிக்க முடியலை நான் கொஞ்சம் சைக்கோ மாதிரி முதல்ல இருந்ததாலையான்னு தெரியலை அவளுக்கு என்னைப்பார்த்தா கொஞ்சம் பயம், கிளாஸ்ல இன்னும் ரெண்டு பிரண்ட்ஸ் கிடைச்சாங்க அவங்க செம்ம ஜாலி டைப், கிருஷ்ணா கொஞ்சம் ரிசர்வ்ட் டைப். நான் கிளாஸ்ல அவங்க பக்கத்துல தான் உக்காருவேன் அவள பத்தி கிளாஸ்ல கொஞ்சமும் கண்டுகல நான் ( துரோகி நான் ), ஹாஸ்ட்டல மட்டும் தான் டைம் ஸ்பென்ட் பண்ணுவேன் அவ கூட,
அவ அப்பறம் ஒருநாள் அழுதா அவகூட நான் சரியா பேசுறதில்லைன்னு , அவ என்மேல எவளோ பாசம் வச்சுருக்கான்னு சொல்லிப்புரியவச்சா. எனக்கு பாசம் ,அன்பு எல்லாம் புரிஞ்சுக்கத்தெரியாது, அவ சொன்னப்பிறகுதான் தெரிஞ்சது அவளும் என்னை மாதிரி தான் நினச்சுருக்கான்னு.இன்னும் க்ளோஸ் பிரண்ட்ஸ் ஆகிட்டோம்.

நட்பு பலப்பட்டக்காலம்

எங்க ரெண்டுபேருக்கும் இந்த மூணாவது வருஷம் தான் அதிகமா சண்டை வர ஆரம்பிச்சது நிறைய கருத்து வேறுபாடுகள், தன்னுடைமைஉணர்வு அதிகமாகிருச்சு ரெண்டுபேருக்கும், கோவத்துல அவ ஏதும் பேச மாட்டா திமிர் பிடிச்சவ , நான் கோவம் வந்ததும் கை நீட்டிருவேன், பாவம் புள்ள நிறைய அடிவாங்கிருக்கு என்கிட்ட, ஆனாலும் நான் தான் இப்போ வரைக்கும் முதல்ல சமாதானம் பண்ணுவேன் (எனக்கு இருக்கிற ஒரே தோழி அவ தான் அதான் ) ரெம்ப சின்னதா இருப்பா கிருஷ்ணா குட்டியா உயரம் , எடை ரெம்ப கம்மி எட்டாவது படிக்கிற புள்ள மாதிரித்தான் இருப்பா இப்போ வரைக்கும்.

தோழிக்குழந்தை :

அவ ரெம்ப குட்டியா இருக்கதால நான் அவள பாப்பான்னு தான் கூப்பிடுவேன், ரெம்ப செல்லம் எனக்கு என்னோட முதல் குழந்தை அவ தான். ரெம்ப சண்டை வரும் ரெண்டுபேருக்கும் இப்போ வரைக்கும் ஆனாலும் அவ இல்லாம என்னாலையும், நானில்லாம அவனாலயும் இருக்க முடியாது. நிறைய விஷயம் எனக்கு அவ சொல்லுவா வாழ்க்கையில நான் நிலை தடுமாறிய பல தருணங்கள்ள தாங்கிப்பிடிச்சு,காப்பாத்திருக்கா. நான் சிலர் நல்லா இருக்கனும்ன்னு கடவுள்கிட்ட வேண்டுவேன் அதுல முதல்ல அவ தான், என்னோட உயிரே போனாலும் பரவால அவ சந்தோஷமா இருக்கணும்ன்னு நினைப்பேன். இதுல என்ன பியூட்டினா கடவுள்கள்லயே எனக்குப்பிடிக்காத கடவுள்னா கிருஷ்ணர் தான் ஆனா ஒரு நாளைக்கு நூறு தடவைக்கும் மேல “கிருஷ்ணா கிருஷ்ணா”ன்னு சொல்லிட்டு இருக்கேன் அவளாலத்தான். என் செல்லத்தோழி, குட்டி ராட்சஸி.
கடவுளுக்கு நன்றி இப்பிடி என் வாழ்க்கைய அழகா மாத்துன அந்த தோழி என்னும் தெய்வத்திற்கு!! Love you Krishna !!

நந்தினி மூர்தியின் ட்விட்டர் பக்கத்திற்கு செல்ல இங்கே க்ளிக் செய்யவும்

620 total views, 1 views today

Share Button