உணவுப் பயணங்கள்.:- நியூ தில்லி பகுதி-5

-தேனம்மை லெக்ஷ்மணன்

img_4422

எனக்கு மட்டும் அது மிஞ்சிப் போச்சு. உடனே கடைக்குப் போய் கடைக்காரர் சட்டையைப் பிடித்து ஏன் ஐயா ஏன் இப்பிடி நான் சாப்பிடும்போது கசப்பைக் கொடுத்தாய் என்று உலுக்க ஆசை. ஆனால் கணவர் விடு ஊறுகாய், தயிர் வைச்சு சாப்பிடு. பாகக்காயும் நல்லதுதானே என்று அவர் சாப்பிட நானும் கசந்துகொண்டே சாப்பிட்டு முடித்தேன். சப்பாத்தியும் பாகக்காய் கறியும் சாப்பிட்டது வித்யாசமான அனுபவம்.

டெல்லியின் பஞ்சாபி உணவுகளைப் பத்தி சொல்லியே ஆகணும். மா கி டாபா, அப்னா டாபா, வைஷ்ணோ டாபா என்று கடைகள் தெருவெங்கும் முளைத்திருக்கும். அங்கே நாம் கோதுமை மாவைக் கொண்டுபோய்க்கொடுத்தால் போதும் பிசைந்து அங்கே இருக்கும் தந்தூரி அடுப்பில் ஒட்டி சுட்டு குச்சியால் கொத்தி நிமிஷத்தில் எடுத்துக் கொடுத்துவிடுவார்கள். அரைக்கிலோவில் பத்து ரொட்டி கனம்கனமாக இருக்கும் ஒரு புறம் கருத்து மறுபுறம் உப்பி இருக்கும் ஆனால் ருசியாக இருக்கும். இங்கே விற்கும் பஞ்சாபி பனீர், ஆலு டிக்கி, ட்ரைஃப்ரூட்ஸ் டிக்கி, ப்ரெட் டிக்கி, காலி தால் மாக்னி, தால் ஃப்ரை , கடி, செய்க் கபாப், ஷாஹி பனீர், வெஜிடபிள் கோஃப்டா க்ரேவி எல்லாமே செம செம ருசி.

எங்கள் வீட்டின் கீழ்ப்புறம் ஒரு ஜிலேபி கடை இருந்தது. அதை ஜலேபி என உச்சரிப்பார்கள் நார்த் இந்தியர்கள். மைதாவில் தயிர்போட்டுப் பிசைந்து புளிக்கவைத்து துணியில் ஓட்டை போட்டு மாவை காயும் எண்ணெயில் பிழிந்து ஜீராவில் ஊறவைத்து உடனே எடுப்பார்கள். அதுவும் சமோசாவும் பிரசித்தம். ஆனால் சமோசாவில் முந்திரி பாதாம்பருப்பு வகைகள் மட்டுமில்லை, முழு கொத்துமல்லி விதையும், ஓமமும், சீரகமும் போட்டு இருப்பார்கள். முதலில் சாப்பிடக் கஷ்டமாக இருந்தது பின் பழகி விட்டது.

அதே போல்தான் அந்தூரு உணவுகள் பேசன் ரொட்டி, மக்கி ரோட்டி ( சோளம் ), சரசோங் கீ சாக் ( கடுகுகீரை சப்ஜி ),

சுர்மா என்றொரு ஐட்டம் உண்டு. அது கடலைமாவை டால்டாவில் அல்லது நெய்யில் வறுத்து சீனிப் பொடியும் வறுத்த பாதாம் பிஸ்தா முந்திரியும் சேர்த்து இன்னும் சிறிது நெய்விட்டு உருண்டையாக உருட்டுவது. நம்மூரு மாவுருண்டை ஸ்டைல். நல்ல ருசியாக இருக்கும். அதே போல் மக்கன் பேடா, தூத் பேடா, பாதாம் பேடா, முந்திரி பேடா எல்லாம் தீபாவளி கிஃப்டாக ஒரே ஸ்வீட் பாக்ஸில் கிடைக்கும். தீபாவளி சமயம் தில்லியில் இருந்தால் பரிசுப் பொருட்களாலும் இனிப்புவகைகளாலும் உயர்தர்மான பிஸ்கட், சாக்லேட், பானங்கள், ட்ரைஃபுரூட் டப்பாக்கள் வகைகளாலும் நிரம்பிவிடும் வீடு.

ரோட்டில் கூடையில் சுமந்து தஹி பூரி, தஹி சேவ், டிக்கி, எல்லாம் விற்பார்கள். குல்ச்சா ஸ்டஃபுடு குல்ச்சா எல்லாம் தள்ளுவண்டியில் வரும். சிறுகடைகளில் தோசை என்று தோசைமாவில் கடலைமாவு, மைதா , எல்லாம் போட்டுச் சுடுவார்கள். மஞ்சள் கலரில் இருக்கும் தோசை. !

ஒரு முறை வைஷ்ணோ தேவி கோயிலுக்குப் போயிருந்தபோது அங்கே பஸ்ஸில் எங்கள் கூடவெ வந்த சமையற்காரர்கள் எல்லா இடத்திலும் உணவு தயாரித்து வழங்கினார்கள். கடைசியாகத் திரும்பும் சமயம் அவர்களும் களைப்படைந்து விட்டதால் ஒரு பஞ்சாபி டாபாவில் உணவருந்தினோம். மலையிலிருந்து நடந்து நடந்து வந்ததால் எல்லாரும் பஸ்ஸைவிட்டுப் புள்ளத்தாச்சி மாதிரி சாய்த்துச் சாய்த்து நடந்து வந்தோம். ஒரு வழியாக சீட்டுப் பிடித்துச் செட்டிலானதும் இஷ்டப்பட்ட வெரைட்டிகளை ஆர்டர் பண்ணி வெட்டு வெட்டு என்று வெட்டினோம். எங்களுடன் வந்த பஸ் ட்ரைவர் 2 கப் லஸ்ஸி மட்டும் சாப்பிட்டார். !

பகுதி-1-2-3-4

929 total views, 2 views today

Share Button