நீ பிறந்த காலம்…, அழகுக்காலம்….,

மழைக் காலம், கார்காலம், வசந்த காலமெல்லாம்,     எந்த மாதமென்று எனக்குத் தெரியாது… ஆனால்.    நீ பிறந்த இந்த மாதம் எனக்கு அழகுக்காலம்!!..,
ஒரு வேளை, கால எந்திரம் மட்டும் எனக்கு கிடைத்தால் நீ பிறந்தபொழுது,    நான் என்ன செய்து கொண்டிருந்தேன்?     எனப் பார்க்க ஆசை!  அழுகையோடு பிறந்தாயா?    அழகோடு பிறந்தாயா? இல்லை என்னை காண ஆவலோடு பிறந்தாயா?


                                                                                

உன் தாய்க்குதான் நீ பிறந்தாய். ஆனால், என் தாய்க்குப் பின்…, என் தாய் ஆனாய். உன் பிறப்பில் தான்    கண்டுகொண்டேன்…    கவிதைக்கும் உயிருண்டென…,!
ஒவ்வொரு பிறந்த நாளிலும்…,  ஒரு  வயதோடு, கொஞ்சம் அழகையும்    ஏற்றிக் கொள்கிறாய் நீ! உன் பிறந்த நாளன்று     உன்னை வாழ்த்துவதா?இல்லை,   நீ பிறந்த இந்த நாளை வாழ்த்துவதா? புரியாமல் விழித்து நிற்கிறேன். எப்பொழுதும் போல்!!

                                                                                

பிறந்தநாளை எப்போதும்    ஆங்கிலத் தேதியில் கொண்டாடுகிறாய்…    என்ன பாவம் செய்தது, தமிழ் தேதி மட்டும்?  ஒருநாளுக்காக ஓராண்டு காத்திருக்க முடியவில்லை என்னால்!?.    உன் பிறந்தநாளை மாதம்தோறும்…   இல்லையில்லை,நீ பிறந்தகிழமையன்று    வாரம் தோறும் கொண்டாடுவோமா? இல்லையெனில், மணித்துளிகள்தோறும் கொண்டாடுவோமா?


                                                                              

உன் பிறந்த நாளை    தேவதைகள் தினமாய்க் கொண்டாட..,    தேவதைகளே தீர்மானித்திருப்பது     உனக்குத் தெரியுமா?! உன் பெயரில் நடக்கும்     பிறந்தநாள் அர்ச்சனையை ஏற்றுக்கொள்ள     தவம் கிடக்கின்றன…    எல்லாத் தெய்வங்களும்!நீ பிறந்த அன்றிலிருந்து     தன் சாதனைப் பட்டியலில்     உன் பிறப்பை முதன்மையாய்க்    குறித்து வைத்திருப்பான் பிரம்மன்!

ஒருமுறைதான் பிறந்தாய்,    உன்னைப் பார்க்கும்     ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன் நான்.., உன் பிறப்பு     உன் தாய்க்குத் தாய்மையையும்,    எனக்கு வாழ்வையும் தந்தது! உன் அறிமுகமில்லயேல், நான் என்னவாகியிருப்பேனோ?! தெரியாது.

                                                                               

 

விந்தையான உலகம்…….!
விளங்கமுடியா மானிடம்……!
நொந்துபோய் வீழாமல்…….
சிந்தனைவேண்டும்.
சீரியதாய் நேரியதாய்
வாழக்கிடைத்த பயன்
நான்மட்டும் வாழ்வதல்ல
நாம்வாழ நான்வாழ
சுற்றமே வாழவேண்டும்
இவ்வுண்மை புரிதல்வேண்டும்
நீவீர் சிரித்து
இன் நிலத்தைச் சிரிக்கவைத்து
நீர் வாழும் வாழ்வை
நினைத்துப் பார்க்கின்றேன்
இதுதான் வாழ்கை
வருடங்கள் வருவதிலும்
போவதிலும் என்னபயன்?
செய்யும் செயல்களால்த்தான்
செயல்களுக்கும் பயன்
இன்னுமோர் ஆண்டு
இனிதாய் மலர்ந்திருக்கு
புதிதாய் பெரிதாய்
நிறைவாய் உயர்வாய்
வாழ வாழ்த்துகிறேன்…!
                                                                                           

       டிஸ்கி:எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து நட்பென்னும் ஓர் புள்ளியில் இணைந்து, ஒரே அலைவரிசையில் பயணித்து, வாழ்வாதாரத்திற்காக, என்னை பிரிந்து, தூரதேசத்தில் வாழும் என் தோழமைக்கு இன்று பிறந்த நாள்.                           

 

Source:  http://rajiyinkanavugal.blogspot.in/2011/11/blog-post_10.html

217 total views, 1 views today

Share Button